Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

6th Grade Tamil Lessons

8th Social

ஐரோப்பியர்களின் வருகை (Updated On: May 15, 2024)

  • இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர்.
  • தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாள ராக (Dubash) இருந்தார்.
  • 1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அக்காலத்தைப் பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்பு மிக்க பதிவாக நமக்குக் கிடைத்துள்ளன.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.
  • தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் 'சென்னை பதிப்பாசனம்' சென்னையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1642ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.
  • டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்டது.
  • இந்தியக் கட்டடக் கலையின் கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றாக புனித பிரான்சிஸ் ஆலயம் (கொச்சி), புனித லூயிஸ் கோட்டை (பாண்டிச்சேரி), புனித ஜார்ஜ் கோட்டை (சென்னை), புனித டேவிட் கோட்டை (கடலூர்), இந்தியா கேட், டெல்லி பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியன உள்ளன.
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
  • இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ஏழாம் எட்வர்டு, தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
  • ரிசர்வ் வங்கி 1935இல் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
  • மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ஜனவரி, 1938இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
  • 1690இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
  • கி.பி.(பொ.ஆ) 1453இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது.
  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார். அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
  • 1487ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார். மன்னர் இரண்டாம் ஜான் அவரை ஆதரித்தார்.
  • வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
  • இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கி.பி.(பொ.ஆ.) 1498இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார்.
  • அவரை மன்னர் சாமரின் வரவேற்றார்.
  • இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில நூறு வீரர்களுடன் 1500ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
  • வாஸ்கோடகாமா 1501இல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்பொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
  • கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார். இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார்.
  • மன்னர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டு கொச்சின் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று.
  • 1524இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524இல் கொச்சியில் காலமானார்.
  • பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.
  • கப்பற்படையை பலப்படுத்த அல்மெய்டாவின் அவர் பின்பற்றிய கொள்கை 'நீலநீர்க்கொள்கை' எனப்பட்டது.
  • இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சோ-டி-அல்புகர்க் ஆவார்.
  • அவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார். 1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
  • அல்போன்சோ-டி- அல்புகர்க் இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
  • 1534இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் 1537இல் டையூவைக் கைப்பற்றினார். பின்னர் குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548இல் ஆக்கிரமித்தார்.
  • போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்.
  • வங்காள கடற்கரையில் ஹுக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர்.
  • போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.
  • 1556இல் போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
  • அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில் ’இந்திய மருத்துவ தாவரங்கள்’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
  • 1739ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.
  • போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
  • டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினம் என்ற இடத்தில் நிறுவினர்.
  • கி.பி. 1605இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் (Spice Island) ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர்.
  • ஆரம்பத்தில் பழவேற்காடு (Pulicat) டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் 1690இல் பழவேற்காட்டிலிருந்து தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
  • இந்தியப் பொருட்களானபட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும்.
  • பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்களில் அவர்களது முக்கிய வர்த்தக மையங்கள் இருந்தன.
  • 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்றனர். இது அம்பாய்னா படுகொலை என்று அழைக்கப்படுகிறது.
  • 1759இல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
  • பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் 1613இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர். இந்தக் கோட்டை ஒரு காலத்தில் டச்சு அதிகார மையத்தின் இருப்பிடமாக இருந்தது.
  • இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31 அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார்.
  • 1608ஆம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகளைப் பெற அனுப்பிவைக்கப்பட்டார்.
  • போர்ச்சுக்கீசிய தலையீட்டால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை.
  • 1612இல் சூரத் அருகே நடைபெற்ற கடற்போரில் ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட், போர்ச்சுக்கீசிய கடற்படையைத் தோற்கடித்தார்.
  • பேரரசர் ஜஹாங்கீர், 1613இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
  • 1614இல் கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன், போர்ச்சுக்கீசியரை வென்றார். இந்த சம்பவங்கள் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கௌரவத்தை அதிகரித்தன.
  • 1615இல் ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.
  • ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் 1611இல் நிறுவினர்.
  • 1639இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
  • மெட்ராசில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 'புனித ஜார்ஜ் கோட்டை' என அழைக்கப்படும் தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது. இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும், கிழக்குப் பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.
  • இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டார். திருமண சீதனமாக பம்பாய் தீவை போர்ச்சுக்கீசிய மன்னரிடமிருந்து பெற்றார்.
  • 1668இல் ஆங்கில கிழக்கிந்தியர் 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவை மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பெற்றது.
  • 1690ஆம் ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தகமையம் நிறுவப்பட்டது.
  • 1696இல் சுதாநுதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது. அது 1700இல் வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது.
  • 1757இல் பிளாசி போர் மற்றும் 1764இல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.
  • இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது. 1858க்குப் பிறகு இந்தியா ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17இல் ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார்.
  • 1620இல் தரங்கம்பாடி (தமிழ்நாடு), 1676இல் செராம்பூர் (வங்காளம்) ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர்.
  • செராம்பூர், டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.
  • 1845இல்டேனியர்கள் இந்தியாவிலிருந்த தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
  • தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர். சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவினார்.
  • பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்ட து .
  • இந்தியாவிற்கு வருகை தந்த ஐரேப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.
  • இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் சூரத் நகரில் நிறுவினார்.
  • 1669இல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.
  • 1673இல் பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்ட்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.
  • பாண்டிச்சேரியில் செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் கட்டினார்.
  • 1742இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
  • அவருக்குப் பின் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக டூமாஸ் அனுப்பப்பட்டார்.
  • பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது.

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை (Updated On: June 1, 2024)

  • 1498ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார்.
  • வங்காள நவாப் அலிவர்திகான் 1756இல் இறந்த பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்-தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
  • சிராஜ்-உத்-தொளா கல்கத்தாவிலுள்ள ஆங்கிலேயர்களின் குடியேற்ற பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி, வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள வணிக மையத்தை கைப்பற்றினார்.
  • 1756 ஜுன் 20 அன்று ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம் சரணடைந்தது.
  • மார்ச் 1757இல் பிரெஞ்சுக் குடியேற்றமான சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
  • பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தெளலா, பிரெஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள் நடைபெற்றது.
  • 1757ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்றனர்.
  • வங்காளத்தின் 24 பர்கானா எனும் பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்.
  • பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தின் அரியணை ஏறிய மீர்ஜாபர் (1757-1760) ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து நீக்கி விட்டு அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக்கினர்.
  • மீர்காசிம் ஆங்கிலேயருக்கு புர்த்வான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய பகுதிகளை வழங்கினார்.
  • மீர்காசிம் வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார்.
  • தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
  • ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.
  • பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளபாதுகாக்கப்ப ட்ட ஒரு சிறிய நகரமே பக்சார் ஆகும்.
  • 1764ஆம் ஆண்டு அக்டோபர் 22இல் இங்கு நடைபெற்ற போரில் சுஜா-உத்- தெளலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ–வால் தோற்கடிக்கப்பட்டனர்.

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Notes will be uploaded for this lesson soon...

மக்களின் புரட்சி

Notes will be uploaded for this lesson soon...

பாறை மற்றும் மண்

Notes will be uploaded for this lesson soon...

வானிலையும் காலநிலையும்

Notes will be uploaded for this lesson soon...

நீரியல் சுழற்சி

Notes will be uploaded for this lesson soon...

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

Notes will be uploaded for this lesson soon...

குடிமக்களும் குடியுரிமையும்

Notes will be uploaded for this lesson soon...

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Notes will be uploaded for this lesson soon...

இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Notes will be uploaded for this lesson soon...

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Notes will be uploaded for this lesson soon...

இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Notes will be uploaded for this lesson soon...

இடர்கள்

Notes will be uploaded for this lesson soon...

சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல்

Notes will be uploaded for this lesson soon...

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Notes will be uploaded for this lesson soon...

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Notes will be uploaded for this lesson soon...

ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Notes will be uploaded for this lesson soon...

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Notes will be uploaded for this lesson soon...

தொழிலகங்கள்

Notes will be uploaded for this lesson soon...

கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Notes will be uploaded for this lesson soon...

புவிப்படங்களைக் கற்றறிதல்

Notes will be uploaded for this lesson soon...

பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Notes will be uploaded for this lesson soon...

நீதித்துறை

Notes will be uploaded for this lesson soon...

பொது மற்றும் தனியார் துறைகள்

Notes will be uploaded for this lesson soon...

Comments


Comments

No comments yet for this lesson. Be the first to comment!

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section