10th Tamil
அன்னை மொழியே (Updated On: May 7, 2024)
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத்
தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்
- துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் பெருஞ்சித்திரனார்.
- இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் .
- சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்-
க.சச்சிதானந்தன்
தமிழ்ச்சொல் வளம் (Updated On: May 17, 2024)
- சுள்ளி- காய்ந்த குச்சு (குச்சி); விறகு-
காய்ந்த சிறுகிளை; வெங்கழி- காய்ந்த கழி;
கட்டை- காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
- துளிர் அல்லது தளிர் -> நெல், புல்
முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது
கொழுந்து -> புளி, வேம்பு முதலியவற்றின்
கொழுந்து; குருத்து -> சோளம், கரும்பு,
தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து;
கொழுந்தாடை -> கரும்பின் நுனிப்பகுதி.
- அரும்பு->பூவின் தோற்றநிலை; போது-> பூ
விரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்)-> பூவின்
மலர்ந்த நிலை; வீ ->மரஞ்செடியினின்று பூ
கீழே விழுந்த நிலை; செம்மல்->பூ வாடின நிலை.
- பூம்பிஞ்சு-> பூவோடு கூடிய இளம்பிஞ்சு;
பிஞ்சு-> இளம் காய்; வடு-> மாம்பிஞ்சு; மூசு->
பலாப்பிஞ்சு; கவ்வை-> எள்பிஞ்சு; குரும்பை->
தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;
முட்டுக் குரும்பை-> சிறு குரும்பை; இளநீர்->
முற்றாத தேங்காய்; நுழாய்-> இளம்பாக்கு;
கருக்கல்-> இளநெல்; கச்சல்-> வாழைப்பிஞ்சு.
- கொத்து -> அவரை, துவரை முதலியவற்றின்
குலை; குலை -> கொடி முந்திரி போன்றவற்றின்
குலை; தாறு -> வாழைக் குலை; கதிர் ->கேழ்வரகு,
சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது
குரல் -> நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு ->
வாழைத்தாற்றின் பகுதி.
- சூம்பல் -> நுனியில் சுருங்கிய காய்; சிவியல் ->
சுருங்கிய பழம்; சொத்தை -> புழுபூச்சி அரித்த
காய் அல்லது கனி; வெம்பல் -> வெப்பத்தினால்
பழுத்த பிஞ்சு; அளியல் -> குளுகுளுத்த பழம்;
அழுகல் -> குளுகுளுத்து நாறிய பழம் அல்லது
காய்; சொண்டு -> பதராய்ப் போன மிளகாய்.
- கோட்டான் காய் அல்லது கூகைக்காய் ->
கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட
காய்; தேரைக்காய் -> தேரை அமர்ந்ததினால்
கெட்டகாய் ; அல்லிக்காய் -> தேரை
அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய் ->
தென்னையில் கெட்ட காய்.
- தொலி -> மிக மெல்லியது; தோல் ->
திண்ணமானது; தோடு -> வன்மையானது; ஓடு ->
மிக வன்மையானது; குடுக்கை -> சுரையின் ஓடு;
மட்டை -> தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி ->
நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை ->
வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.
- கூலம் : நெல்,புல் (கம்பு) முதலிய
தானியங்கள் ; பயறு: அவரை, உளுந்து
முதலியவை ; கடலை: வேர்க்கடலை,
கொண்டைக்கடலை முதலியவை; விதை: கத்தரி,
மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ்: புளி,
காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து;
முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின்
வித்து; கொட்டை: மா, பனை முதலியவற்றின்
வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை:
அவரை, துவரை முதலிய பயறுகள்.
- நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின்
இளநிலை ; கன்று: மா , புளி, வாழை
முதலியவற்றின் இளநிலை; குருத்து: வாழையின்
இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை; குட்டி: விளாவின் இளநிலை; மடலி அல்லது
வடலி: பனையின் இளநிலை; பைங்கூழ்: நெல்,
சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.
- மொழிஞாயிறு என்றழைக்கப்பட்டவர் தேவநேயப்பாவாணர். இவர் பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித்
தலைவராக இருந்தவர்.
- உலகத்திலேயே ஒரு
மொழிக்காக உலக மாநாடு
நடத்திய முதல் நாடு
மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல்
மொழியும் தமிழே.
- போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத்
தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன்
எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய
காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்ப ட்டுள்ளது.
இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
இரட்டுற மொழிதல் (Updated On: May 17, 2024)
- தமிழ், இயல் இசை நாடகம் என
முத்தமிழாய் வளர்ந்தது; முதல், இடை, கடை
ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
- தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப்
பெற்றது.
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும்
சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு
சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் .
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும்
சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உரைநடையின் அணிநலன்கள் (Updated On: May 17, 2024)
- தமிழ் மறையான திருக்குறளைத்
தந்த “திருவள்ளுவர்” பெயரில்
முதல் தமிழ்க் கணினி 1983
செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா
புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம்
உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது.
எழுத்து, சொல் (Updated On: May 7, 2024)
- உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை ,
ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம் ,
மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய
பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.
- செய்யுளில் மொழிக்கு முதலிலும்
இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர்
நெட்டெழுத்தகள் தத்தம் அளவில்
நீண்டு ஒலிக்கும் போது அதைக்
குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான
குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும்.
இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
- செய்யுளில் ஓசை குறையும் போது
அதனை நிறைவு செய்ய , நெட்டெழுத்துகள்
அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை
என்போம். இதனை இசைநிறை அளபெடை
என்றும் கூறுவர்.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும்
இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி
அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்
சொல்லாகத்திரிந்து அளபெடுப்பது
சொல்லிசை அளபெடை ஆகும்.
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை
நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண்,
ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும்
ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை
ஆகும்.
- ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன-நன்னூல்
- ஒரு சொல் தனித்து நின்று பொருள்
தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள்
தருவது தொடர்மொழி ஆகும்.
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு
பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும்
தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது
பொதுமொழி எனப்படும்.
- ஒரு வினை அல்லது செயலைக்
குறிக்கும் பெயரானது எண், இடம் ,
காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ
வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது
தொழிற்பெயர் எனப்படும்.
- வினையடியுடன் விகுதி சேர்வதால்
உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற
தொழிற்பெயர் ஆகும்.
- எதிர்மறை பொருளில் வருவது
எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.
- விகுதி பெறாமல் வினைப்பகுதியே
தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.
- விகுதி பெறாமல் முதனிலை திரிந்து
வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த
தொழிற்பெயர் ஆகும்.
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை
அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும்
வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது
வினையாலணையும் பெயர் எனப்படும். அது
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று
இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
கேட்கிறதா என்குரல்! (Updated On: May 7, 2024)
- கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும்
பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் எனப்படுகிறது
- மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும்
பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை எனப்படுகிறது.
- வடக்கு என்பதற்கு வாடை என்னும்
பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை எனப்படுகிறது.
- தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல் காற்று எனப்படுகிறது.
- தென்றல், பலவித மலர்களின்
நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே
வண்டுகளையும் அழைத்து வருவதால்,
இளங்கோவடிகள்
"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"
-என நயம்பட உரைக்கிறார்.
- கி.பி. (பொ. ஆ.) முதல்
நூற்றாண்டில் ஹிப்பாலஸ்
என்னும் பெயர்கொண்ட
கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால்
நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு
நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய
வழியைக் கண்டுபிடித்தார்.
- காற்றின் ஆற்றலை, வளி மிகின் வலி
இல்லை (புறம். 51) என்று ஐயூர் முடவனார்
சிறப்பித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன்
15-ம் தேதி உலகக் காற்று நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
காற்றே வா! (Updated On: May 7, 2024)
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத்
தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்;
- இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின்
ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்.
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை
வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
- உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும்
இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக்
கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
முல்லைப்பாட்டு (Updated On: May 7, 2024)
- முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது.
- முல்லைப்பாட்டு
ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில்
குறைந்த அடிகளை உடைய நூல் இது.
புயலிலே ஒரு தோணி (Updated On: May 7, 2024)
- வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும்
புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை
2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
- புதுதில்லியில் உள்ள உலக வானிலை
அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை
ஆய்வு மையம் 2004 செப்டம்பரில்
இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க
64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
- வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள்,
மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை,
தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப்
பெயர்களை வழங்கியுள்ளன.
- இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே
பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ்,
பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்). கஜா’ புயலின் பெயர்
இலங்கை தந்தது. ‘பெய்ட்டி’
புயலின் பெயர் தாய்லாந்து கொடுத்தது.
- புயலுக்கு முன்பு பேரழிவு
பற்றிய விழிப்புணர்வு ,
தயாரிப்பு, பேரிடர்
மேலாண்மை, பாதிப்புக்
குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை
மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள்
உதவும்.
தொகைநிலைத் தொடர்கள் (Updated On: May 7, 2024)
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்
தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்”
எனப்படும்.
- பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும்
பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின்
இடையில், வேற்றுமை உருபுகளோ ,
வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ
தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது
அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு
சொல் போல் நிற்குமானால் அதனைத்
தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
- தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை,
பண்புத்தொகை , உவமைத்தொகை ,
உம்மைத்தொகை, அன்மொழித்தொகை
என்பன ஆகும்.
- ஒரு தொடரில் வேற்றுமை
உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்)
ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து
பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை
எனப்படும்.
- ஒரு தொடரில் வேற்றுமை
உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும்
சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும்
உடன் தொக்க தொகை எனப்படும்.
- காலம் காட்டும் இடை நிலையும்
பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்
பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு
சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை”
எனப்படும்.
- காலம் கரந்த பெயரெச்சமே
வினைத்தொகையாகும்.
எ.கா. வீசுதென்றல், கொல்களிறு
- நிறம், வடிவம், சுவை , அளவு
முதலானவற்றை உணர்த்தும்
பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும்
பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை”
என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன
என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது
பண்புத்தொகை எனப்படும்.
- சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர்
பின்னும் நின்று இடையில் "ஆகிய "
என்னும் பண்பு உருபு தொக்கி வருவது
இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
எ.கா. மார்கழித் திங்கள் , சாரைப்பாம்பு.
- உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்)
இடையில் உவமஉருபு மறைந்து வருவது
உவமைத்தொகை எனப்படும்.
எ.கா. மலர்க்கை (மலர் போன்ற கை)
- இரு சொற்களுக்கு இடையிலும்
இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல்
மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல் ,
முகத்தல் , நீட்டல் என்னும் நான்கு அளவுப்
பெயர்களைத் தொடர்ந்து வரும்.
எ.கா. அண்ணன் தம்பி, தாய்சேய்
- வேற்றுமை , வினை, பண்பு, உவமை ,
உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களில்
உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும்
மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்
தொகை எனப்படும்.
எ.கா. சிவப்புச்சட்டை பேசினார்
முறுக்கு மீசை வந்தார்
விருந்து போற்றுதும்! (Updated On: May 7, 2024)
- முகம் வேறுபடாமல்
முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க
வேண்டும் என்பதை “மோப்பக் குழையும்
அனிச்சம்” என்ற குறளில் வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
- அமிழ்தமே
கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும்
கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான்
உலகம் நிலைத்திருக்கிறது என்பதை ,
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே" என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
- நடு இரவில் விருந்தினர் வந்தாலும், மகிழ்ந்து
வரவேற்று உணவிடும் நல்ல இயல்பு குடும்பத்
தலைவிக்கு உண்டு. இதை
“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்” என்று நற்றிணை குறிப்பிடுகிறது.
- தானியம் ஏதும்
இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த
தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து
விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.
இதனை,
"குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்"
என்று புறநானூறு கூறுகிறது
- இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு
உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு
முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள்
யாரேனும் உள்ளீர்களா ? என்று கேட்கும்
வழக்கம் இருந்ததை,
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”
என்று குறுந்தொகை கூறுகிறது.
காசிக்காண்டம் (Updated On: May 7, 2024)
- சொல்லும் பொருளும் ->
அருகுற – அருகில்,
முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும்
விருந்தோம்பல் சொற்கள்
- இலக்கணக்குறிப்பு ->
நன்மொழி – பண்புத்தொகை.
****
வியத்தல், நோக்கல்,
எழுதல், உரைத்தல்,
செப்பல், இருத்தல்,
வழங்கல் -தொழிற்பெயர்கள்
- முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும்
திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்கா ண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை
என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற
பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி,
கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.
மலைபடுகடாம் (Updated On: May 7, 2024)
- சொல்லும் பொருளும் -
அசைஇ – இளைப்பாறி, அல்கி – தங்கி,
கடும்பு – சுற்றம், நரலும் – ஒலிக்கும்,
ஆரி - அருமை, படுகர் – பள்ளம்,
வயிரியம் – கூத்தர், வேவை – வெந்தது,
இறடி – தினை, பொம்மல் – சோறு
- அசைஇ, கெழீஇ ஆகியவை சொல்லிசை அளபெடைகள்
- ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே
சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று
வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ’மலைபடுகடாம்’. 583 அடிகளைக் கொண்ட இது
கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம்
செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால்
இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.
கோபல்லபுரத்து மக்கள் (Updated On: May 7, 2024)
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின்
வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
- கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே
கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின்
வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய
அகாதெமி விருதினைப் பெற்றது.
- கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இருபதுக்கும்
மேற்பட்ட நூல்களைப் படை த்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில்
அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில்
தொகுப்பாக வெளிவந்துள்ளன ;
- இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று
அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
தொகாநிலைத் தொடர்கள் (Updated On: May 7, 2024)
- ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில்
சொல்லோ உருபோ மறைந்து வராமல்
வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது
தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- விளியுடன் வினை தொடர்வது
விளித்தொடர் ஆகும்.
- வினை முற்றுடன்
ஒரு பெயர் தொடர்வது
வினைமுற்றுத்தொடர் ஆகும்.
- முற்றுப் பெறாத வினை ,
பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது
பெயரெச்சத்தொடர் எனப்படும்.
- முற்றுப் பெறாத வினை ,
வினைச்சொல்லைக் கொண்டு முடிவது
வினையெச்சத்தொடர் ஆகும்.
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட
அமையும் தொடர்கள் வேற்றுமைத்
தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
- இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ
தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
- உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ
தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை
அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
- ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள்
சேர்ந்து பெயரைக்கொண்டு
முடியும் கூட்டுநிலைப்
பெயரெச்சங்களை
இக்காலத்தில் பெருமளவில்
பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க,
வல்ல முதலான பெயரெச்சங்களை, செய
என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன்
சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப்
பெயரெச்சங்கள் உருவாகின்றன.
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
செயற்கை நுண்ணறிவு
Notes will be uploaded for this lesson soon...
பெருமாள் திருமொழி (Updated On: May 7, 2024)
- பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்
ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர்
குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
- வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர
ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
- சொல்லும் பொருளும்-> சுடினும் – சுட்டாலும், மாளாத-தீராத, மாயம் – விளையாட்டு
பரிபாடல் (Updated On: May 7, 2024)
- சொல்லும் பொருளும்->
விசும்பு – வானம்,
ஊழி – யுகம்,
ஊழ் – முறை,
தண்பெயல் – குளிர்ந்த மழை,
ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த,
பீடு – சிறப்பு,
ஈண்டி – செறிந்து திரண்டு.
- இலக்கணக் குறிப்பு->
ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர்வானம் – வினைத் தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- 1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
..............................
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்".
அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு
ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து
நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை
நுண்மையாக இருக்கின்றன.
- பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலை
எழுதியவர் கீரந்தையார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது. இது சங்க
நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள்
இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
Notes will be uploaded for this lesson soon...
இலக்கணம் - பொது
Notes will be uploaded for this lesson soon...
மொழிபெயர்ப்புக் கல்வி
Notes will be uploaded for this lesson soon...
நீதி வெண்பா
Notes will be uploaded for this lesson soon...
திருவிளையாடற் புராணம்
Notes will be uploaded for this lesson soon...
புதிய நம்பிக்கை
Notes will be uploaded for this lesson soon...
வினா, விடை வகைகள், பொருள்கோள்
Notes will be uploaded for this lesson soon...
நிகழ்கலை
Notes will be uploaded for this lesson soon...
பூத்தொடுத்தல்
Notes will be uploaded for this lesson soon...
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Notes will be uploaded for this lesson soon...
கம்பராமாயணம்
Notes will be uploaded for this lesson soon...
பாய்ச்சல்
Notes will be uploaded for this lesson soon...
அகப்பொருள் இலக்கணம்
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
சிற்றகல் ஒளி (தன்வரலாறு)
Notes will be uploaded for this lesson soon...
ஏர் புதிதா?
Notes will be uploaded for this lesson soon...
மெய்க்கீர்த்தி
Notes will be uploaded for this lesson soon...
சிலப்பதிகாரம்
Notes will be uploaded for this lesson soon...
மங்கையராய்ப் பிறப்பதற்கே...
Notes will be uploaded for this lesson soon...
புறப்பொருள் இலக்கணம்
Notes will be uploaded for this lesson soon...
சங்க இலக்கியத்தில் அறம்
Notes will be uploaded for this lesson soon...
ஞானம்
Notes will be uploaded for this lesson soon...
காலக்கணிதம்
Notes will be uploaded for this lesson soon...
இராமானுசர் (நாடகம்)
Notes will be uploaded for this lesson soon...
பா - வகை, அலகிடுதல்
Notes will be uploaded for this lesson soon...
ஜெயகாந்தம் ( நினைவு இதழ்)
Notes will be uploaded for this lesson soon...
சித்தாளு
Notes will be uploaded for this lesson soon...
தேம்பாவணி
Notes will be uploaded for this lesson soon...
ஒருவன் இருக்கிறான்
Notes will be uploaded for this lesson soon...
அணி
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!
*************************************