7th Science
அளவீட்டியல் (Updated On: May 16, 2024)
- வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும்
குறிப்பிடப்பட இயலாத இயற்பியல் அளவுகள்
அடிப்படை அளவுகள் எனப்படும்.
- SI (System International Unit) அலகு
முறையில் ஏழு அடிப்படை அளவுகள் உள்ளன.
- அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ, வகுத்தோ
அல்லது கணித முறைப்படி இணைத்தோ பெறப்படும்
பிற இயற்பியல் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
- வழி அளவுகளை அளவிடப்
பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.
- ஒரு முப்பரிமாணப் பொருள்
ஆக்கிரமித்துக்கொள்ளும் இடமே அதன் கன அளவு
அல்லது பருமன் எனப்படும்.
- ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு
மீட்டர் பக்க அளவு கொண்ட
சதுரம் ஒன்றினுள் அடைபடும்
பரப்பாகும். பரப்பளவு என்பது சதுர மீட்டரில்
குறிக்கப்பட்டாலும், பரப்பு சதுர வடிவமாக
இருக்க வேண்டிய அவசியமில்லை.
- திரவங்களின் பருமனை
அளக்க வேறு சில அலகுகளும்
பயன்படுத்தப் படுகின்றன.
அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ்
(Ounce) மற்றும் குவார்ட் (Quart).
- சமையல் எண்ணெய் மற்றும்
விளக்கெண்ணெய் போன்றவை
பார்ப்பதற்கு நீரைவிட அடர்த்தி
மிகுந்தவைகளாகத் தோன்றினாலும்,
அவற்றைவிட நீர் அதிக அடர்த்தி கொண்டது.
விளக்கெண்ணெயின் அடர்த்தி 961 கிகி/மீ3.
- ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும்
சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு
ஆகும்.
- நெப்டியூன், சூரியனிலிருந்து
30 வானியல் அலகு தொலைவில் உள்ளது. அதாவது,
நெப்டியூன் சூரியனிலிருந்து பூமியை விட 30 மடங்கு
தொலைவில் உள்ளது.
- நமது சூரிய குடும்பத்திற்கு
மிக அருகில் அமைந்துள்ள
விண்மீன் ப்ராக்சிமா சென்டாரி
(Proxima Centauri). இதன்
தொலைவு 2,68,770 வானியல்
அலகாகும்.
- விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் மிக நீண்ட தொலைவுகளை
அளவிட ஒளி ஆண்டு என்னும் ஒரு தனித்தன்மை
வாய்ந்த அலகினைப் பயன்படுத்துகின்றனர்.
- ஒளி ஆண்டு என்பது ஒளியானது
வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு
என வரையறுக்கப்படுகிறது.
- ஒளி ஆண்டில் குறிக்கப்படும்போது, ப்ராக்சிமா
சென்டாரி (Proxima Centauri) நமது பூமியிலிருந்தும்
சூரிய குடும்பத்திலிருந்தும் 4.22 ஒளி ஆண்டு
தொலைவில் உள்ளது. பூமியானது அண்டத்தின்
மையத்திலிருந்து 25,000 ஒளி ஆண்டு
தொலைவில் உள்ளது.
- சமநிலை மூன்று வகைப்படும். அவை:
உறுதிச்சமநிலை, உறுதியற்ற சமநிலை
மற்றும் நடுநிலைச் சமநிலை
- கன அளவின் SI அலகு கன மீட்டர் அல்லது மீ3 ஆகும்.
விசையும் இயக்கமும் (Updated On: May 16, 2024)
- வான் மற்றும் கடல்
வழிப் போக்குவரத்துகளில்
தொலைவினை அளவிடப்
பயன்படுத்தப்படும் அலகு நாட்டிகல் மைல்
ஆகும். ஒரு நாட்டிகல் மைல் என்பது
1.852 கி.மீ ஆகும்.
- ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது
திசையினை மாற்றாமல் சமகால இடைவெளிகளில்
சமஅளவு இடப்பெயர்ச்சியினை மேற்கொண்டால்,
அது சீரான திசைவேகத்தில் இயங்குகிறது
எனப்படுகிறது. எ.கா. வெற்றிடத்தில் பயணம்
செய்யும் ஒளி.
- ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது
திசையையோ அல்லது வேகத்தினையோ
மாற்றிக்கொண்டால் அப்பொருள் சீரற்ற
திசைவேகத்தில் உள்ளது எனப்படுகிறது. எ.கா.
இரயில் நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து
புறப்படும் தொடர்வண்டியின் இயக்கம்.
- ஒரு பொருளின் திசைவேகமானது
காலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே
சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர்
முடுக்கம் எனப்படும்.
- ஒரு பொருளின் திசைவேகமானது
காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே
வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம்
எதிர்முடுக்கம் எனப்படும்.
- இடப்பெயர்ச்சி மாறும் வீதம் திசைவேகம்
எனப்படும். திசைவேகத்தின் SI அலகு மீட்டர் /
விநாடி (மீ/வி) ஆகும்.
- திசைவேகம் மாறும் வீதம் முடுக்கம் எனப்படும்.
முடுக்கத்தின் SI அலகு மீ / வி2
- எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும்
செயல்படுவதுபோல் தோன்றுகிறதோ
அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம்
எனப்படும்.
- ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின்
ஈர்ப்பு மையமானது பொதுவாக அதன்
வடிவியல் மையத்தில் அமைகிறது.
- ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத்
தக்கவைத்துக்கொள்ளும் திறனே
அப்பொருளின் சமநிலை எனப்படும்,
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Notes will be uploaded for this lesson soon...
அணு அமைப்பு
Notes will be uploaded for this lesson soon...
தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
Notes will be uploaded for this lesson soon...
உடல் நலமும், சுகாதாரமும்
Notes will be uploaded for this lesson soon...
கனிணி காட்சித் தொடர்பு
Notes will be uploaded for this lesson soon...
வெப்பம் மற்றும் வெப்பநிலை
Notes will be uploaded for this lesson soon...
மின்னோட்டவியல்
Notes will be uploaded for this lesson soon...
நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
Notes will be uploaded for this lesson soon...
செல் உயிரியல்
Notes will be uploaded for this lesson soon...
வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
Notes will be uploaded for this lesson soon...
கணினி வரைகலை
Notes will be uploaded for this lesson soon...
ஒளியியல்
Notes will be uploaded for this lesson soon...
அண்டம் மற்றும் விண்வெளி
Notes will be uploaded for this lesson soon...
பலபடி வேதியியல்
Notes will be uploaded for this lesson soon...
அன்றாட வாழ்வில் வேதியியல்
Notes will be uploaded for this lesson soon...
அன்றாட வாழ்வில் விலங்குகள்
Notes will be uploaded for this lesson soon...
காட்சித் தொடர்பியல்
Notes will be uploaded for this lesson soon...
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Add Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!