7th Tamil
எங்கள் தமிழ் (Updated On: May 7, 2024)
- நாமக்கல் கவிஞர் , தமிழறிஞர், கவிஞர், விடுதலைப்
போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
- காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப்
பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் நாமக்கல் கவிஞர்.
- மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி
உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
ஒன்றல்ல இரண்டல்ல (Updated On: May 7, 2024)
- பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.
- முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி.
- புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.
- பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர்
உடுமலை நாராயணகவி.
- இவர் தமிழ்த் திரைப்படப்
பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்
பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
பேச்சுமொழியும் எழுத்துமொழியும் (Updated On: May 7, 2024)
- தமிழில் பேச்சும மொழிக்கும் எழுத்தும மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு.
எனவே தமிழை இரட்டை வழக்குமொழி என்பர்.
- பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
இடையே பெரிய அளவில் வேறுபாடு
இருந்தால் அஃது இரட்டை வழக்கு
மொழி (Diglossic Language) எனப்படும்.
தமிழில் பழங்காலம் முதலே பேச்சு
மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
இடையே வேறுபாடு இருந்துள்ளது.
தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு,
செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
- பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு
என்றும் கூறுவர்.
- கன்னடம், தெலுங்கு, மலையாளம்
முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.
- பேச்சு மொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு
ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை
வட்டார மொழி என்பர்.
சொலவடைகள்
Notes will be uploaded for this lesson soon...
குற்றியலுகரம், குற்றியலிகரம் (Updated On: May 7, 2024)
- உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம்,
ஆய்தக்குறுக்கம் ஆகியவை சார்பெழுத்துகள் ஆகும்.
- கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின்
இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்.
- தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு
முழுமையாக ஒலிக்கும். வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே
ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை
முற்றியலுகரம் என்பர்.
(எ.கா.) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
- குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள
எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப்
பிரிக்கப்படும்.
- ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும்
குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’
எனப்படும்.
(எ.கா.) எஃகு, அஃது
- தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) அரசு,கயிறு,
ஒன்பது, வரலாறு
- தனி நெடிலைத் தொடர்ந்து வரும்
குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’
எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக
மட்டும் அமையும்.
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு
- வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
- மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
- இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
- ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும்
இல்லை.
காடு (Updated On: May 7, 2024)
- சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் . இவர்
பாரதி தாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் .
பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம்
பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன்
சுருக்கமே சுரதா என்பதாகும்.
- உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக்
கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம்
உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
- காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம்,
இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை,
பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (Updated On: May 7, 2024)
- ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத்
திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ்
வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
- சிறந்த தமிழ்க் கவிதைகளைத்
தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில்
நூலாக்கியுள்ளார்.
விலங்குகள் உலகம் (Updated On: October 1, 2024)
- இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன.
- உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.
- இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர் சரணாலயத்தில்’ மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
- தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (B.Sc. Forestry), முதுநிலை வனவியல் (M.Sc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.
இந்திய வனமகன் (Updated On: October 1, 2024)
- மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர். ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.
- இவர் ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்பகிறார்
- 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
- 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
- கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியுள்ளது.
நால்வகைக் குறுக்கங்கள் (Updated On: October 1, 2024)
- சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
- ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில்
ஒலிக்கும்.
- ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
- அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால்
மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை
அளவில் ஒலிக்கிறது.
- மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை
மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு
குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.
- அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில்
முழுமையாக ஒலிக்கிறது.
- முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும்.
இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து
குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம்
ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
திருக்குறள் (Updated On: October 1, 2024)
- திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுப்புகளைக் கொண்டது.
- அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
- திருக்குறளுக்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
- இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
புலி தங்கிய குகை (Updated On: October 1, 2024)
- காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
- கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
- புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
பாஞ்சை வளம்
Notes will be uploaded for this lesson soon...
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
Notes will be uploaded for this lesson soon...
கப்பலோட்டிய தமிழர்
Notes will be uploaded for this lesson soon...
வழக்கு
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
கலங்கரை விளக்கம்
Notes will be uploaded for this lesson soon...
கவின்மிகு கப்பல்
Notes will be uploaded for this lesson soon...
தமிழரின் கப்பற்கலை
Notes will be uploaded for this lesson soon...
ஆழ்கடலின் அடியில்
Notes will be uploaded for this lesson soon...
இலக்கியவகைச் சொற்கள்
Notes will be uploaded for this lesson soon...
இன்பத்தமிழ்க் கல்வி
Notes will be uploaded for this lesson soon...
அழியாச் செல்வம்
Notes will be uploaded for this lesson soon...
வாழ்விக்கும் கல்வி
Notes will be uploaded for this lesson soon...
பள்ளி மறுதிறப்பு
Notes will be uploaded for this lesson soon...
ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
Notes will be uploaded for this lesson soon...
ஒரு வேண்டுகோள்
Notes will be uploaded for this lesson soon...
கீரைப்பாத்தியும் குதிரையும்
Notes will be uploaded for this lesson soon...
பேசும் ஓவியங்கள்
Notes will be uploaded for this lesson soon...
தமிழ் ஒளிர் இடங்கள்
Notes will be uploaded for this lesson soon...
தொழிற்பெயர்
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
விருந்தோம்பல்
Notes will be uploaded for this lesson soon...
வயலும் வாழ்வும்
Notes will be uploaded for this lesson soon...
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
Notes will be uploaded for this lesson soon...
திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
Notes will be uploaded for this lesson soon...
அணி இலக்கணம்
Notes will be uploaded for this lesson soon...
புதுமை விளக்கு
Notes will be uploaded for this lesson soon...
அறம் என்னும் கதிர்
Notes will be uploaded for this lesson soon...
ஒப்புரவு நெறி
Notes will be uploaded for this lesson soon...
உண்மை ஒளி
Notes will be uploaded for this lesson soon...
அணி இலக்கணம்
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
மலைப்பொழிவு
Notes will be uploaded for this lesson soon...
தன்னை அறிதல்
Notes will be uploaded for this lesson soon...
கண்ணியமிகு தலைவர்
Notes will be uploaded for this lesson soon...
பயணம்
Notes will be uploaded for this lesson soon...
ஆகுபெயர்
Notes will be uploaded for this lesson soon...
திருக்குறள்
Notes will be uploaded for this lesson soon...
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Add Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!