Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

10th Tamil

10th Social

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் (Updated On: June 1, 2024)

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கருத்தைக் கவரும் ஒரு அம்சம்யாதெனில் ஐரோப்பா, மேலாதிக்க சக்தியாக உருப்பெற்றதும் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் காலனிகளாக்கப்பட்டு சுரண்டப்பட்டதுமாகும்.
  • முதலாளித்துவம் தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச் செல்கிறது. முதலாளித்துவத்தின் உச்சகட்டமே ஏகாதிபத்தியம் என லெனின் கூறுகிறார்.
  • 1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது. இச்சீன-ஜப்பானியப் போரில் (1894-1895) சீனாவைச் சிறியநாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது.
  • ரஷ்யா,ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக்கொண்டது.

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Notes will be uploaded for this lesson soon...

இரண்டாம் உலகப்போர்

Notes will be uploaded for this lesson soon...

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Notes will be uploaded for this lesson soon...

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் (Updated On: May 17, 2024)

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், அலிகார் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை, ஆரியசமாஜம், இராமகிருஷ்ணா மிஷன், தியோபந்த் இயக்கம் போன்ற சமயப் புத்ததெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொருவகை.
  • இராஜா ராம்மோகன் ராய் (1772-1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்.
  • அவர், தனது தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்ததார்.
  • சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த சமூகக் கொடுமைகள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
  • இராஜா ராம்மோகன் ராய் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார்.
  • இராஜா ராம்மோகன் ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார்.
  • அவர் நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக்கூறுகளை முன்வவைத்தார். 1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார். 2. அவர் ஒருவரே உண்மையின், எல்லலையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணை யாருமில்லலை. 3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது. 4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
  • கேசவ் சந்திர சென் (1838-84), 1857இல் சபையில் இணைந்தார்.
  • 1866இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பான ”இந்திய பிரம்ம சமாஜத்தை” உருவாக்கினார்.
  • இதன்பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைக்கப்படலாயிற்று.
  • குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்குவயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்திய பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி ’சாதாரண சமாஜ்’ எனும் அமைப்பை நிறுவினர்.
  • வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார்.
  • விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • 1860இல் முதன்முைறயாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பபெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்ககான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.
  • பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பபாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825-1898) ஆவார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Notes will be uploaded for this lesson soon...

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Notes will be uploaded for this lesson soon...

தேசியம்: காந்திய காலகட்டம்

Notes will be uploaded for this lesson soon...

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் (Updated On: June 1, 2024)

  • சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association–MNA), 1852இல் கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்களாலும் நிறுவப் பெற்றது.
  • வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதைப்படுத்தப்படுவதற்கு எதிராக இவ்வமைப்பு (MNA) நடத்திய போராட்டம் முக்கியமான பங்களிப்பாகும்.
  • இவ்வமைப்பு மேற்கொண்ட முயற்சிகளால் சித்திரவதை ஆணையம் (Torture Commission) நிறுவப்பட்டது.
  • அதன் விளைவாகச் சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய சித்திரவதைச் சட்டம் (Torture Act) ஒழிக்கப்பட்டது.
  • T. முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877இல் நியமிக்கப்பட்டார்.
  • G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878இல் தி இந்து எனும் (The Hindu) செய்திப் பத்திரிக்கையைத் தொடங்கினர்.
  • G. சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.
  • இது இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot) சவுத் இந்தியன் மெயில் (South Indian Mail), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது.
  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு, P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • இந்திய தேசியக் காங்கிரசின் முதற்கூட்டம் 1885இல் பம்பாயில் நடைபெற்றது. மொத்தம் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவர்.
  • இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886இல் கொல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது.
  • காங்கிரசின் மூன்றாவது மாநாடு பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887இல் சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் (Makkies Garden) நடைபெற்றது. கலந்து கொண்ட 607 அகில இந்தியப் பிரதிநிதிகள் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • தமிழ்நாடு அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களூரு, பெல்லாரி, தெற்கு கனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சிலபகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.
  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ. உ. சிதம்பரனார், V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும் .
  • சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனார் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஒன்றை துவங்கினார்.
  • வ.உ.சி. அவர்கள் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.
  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • பிபின் சந்திரபால் விடுதலைசெய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சியும் சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
  • சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார். பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்தகோஷ், V.V. சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இப்புரட்சிகர தேசியவாதிகள் பலருக்குப் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த இந்தியா ஹவுஸ் (India House) என்ற இடத்திலும் பாரிசிலும் வழங்கப்பெற்றது.
  • புரட்சிவாதச் செய்தித்தாள்களான இந்தியா, விஜயா, சூர்யோதயம் ஆகியன பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தன.
  • 1904இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர். ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
  • செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார். அவர் 1911 ஜுன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார்.
  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக அன்னிபெசன்ட் நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal) எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
  • அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது - என அன்னிபெசண்ட் கூறினார்.
  • அன்னி பெசன்ட் ‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’ (‘How India wrought for Freedom’), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • பிராமணரல்லாதோர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர். 1912இல் சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association) உருவாக்கப் பெற்றது. அதன் செயலராக C. நடேசனார் பங்காற்றினார்.
  • 1916 ஜுன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation – SILF) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • 1920இல் நடத்தப்பட்ட தேர்தல்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது. சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் 63இல் நீதிக்கட்சி வெற்றிபெற்றது.
  • நீதிக்கட்சியின் A. சுப்பராயலு முதலாவது முதலமைச்சரானார். 1923இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.
  • ஆங்கில அரசு 1919இல் கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தைப் பரிந்துரை செய்த குழுவினுடைய தலைவரின் பெயர் சர் சிட்னி ரௌலட் ஆவார். எனவே இச்சட்டம் பரவலாக ரௌலட் சட்டம் என அறியப்பட்டது.
  • இச்சட்டத்தின் கீழ் முறையான நீதித்துறை சார்ந்த விசாரணைகள் இல்லாமலேயே யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி எனக் குற்றம்சாட்டி அரசு சிறையில் அடைக்கலாம்.

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Notes will be uploaded for this lesson soon...

இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Notes will be uploaded for this lesson soon...

இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Notes will be uploaded for this lesson soon...

இந்தியா – வேளாண்மை

Notes will be uploaded for this lesson soon...

இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Notes will be uploaded for this lesson soon...

இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Notes will be uploaded for this lesson soon...

தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

Notes will be uploaded for this lesson soon...

தமிழ்நாடு - மானுடப் புவியியல்

Notes will be uploaded for this lesson soon...

இந்திய அரசியலமைப்பு

Notes will be uploaded for this lesson soon...

நடுவண் அரசு

Notes will be uploaded for this lesson soon...

மாநில அரசு

Notes will be uploaded for this lesson soon...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Notes will be uploaded for this lesson soon...

இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Notes will be uploaded for this lesson soon...

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Notes will be uploaded for this lesson soon...

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Notes will be uploaded for this lesson soon...

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Notes will be uploaded for this lesson soon...

அரசாங்கமும் வரிகளும்

Notes will be uploaded for this lesson soon...

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Notes will be uploaded for this lesson soon...

Comments


Comments

No comments yet for this lesson. Be the first to comment!

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section