6th Science
அளவீடுகள் (Updated On: May 7, 2024)
- நீளத்தின் SI அலகு மீட்டர்
- நிறையின் SI அலகு கிலோகிராம்
- காலத்தின் SI அலகு வினாடி
- பரப்பளவின் அலகு மீ2
- பருமனின் அலகு மீ3
- ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு
வேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும்
போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு
மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சியே
இடமாறு தோற்றப்பிழை எனப்படும்.
- பூமியை விட நிலவில்
ஈர்ப்பு விசை குறைவு.
எனவே, அங்கு எடை
குறைவாக இருக்கும்.
ஆனால், இரண்டிலும் நிறை சமமாகவே
இருக்கும்.
- நிலவின் ஈர்ப்புவிசை புவியின்
ஈர்ப்பு விசையைப்போல ஆறில் ஒரு பங்கு
இருப்பதால், நிலவில் ஒரு பொருளின்
எடை பூமியில் உள்ளதைவிட ஆறு மடங்கு
குறைவாகவே இருக்கும்.
- ஓடோமீட்டர் என்பது தானியங்கி
வாகனங்கள் கடக்கும் தொலைவைக்
கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு
கருவியாகும்.
- மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட
அலகுகள், 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினரால்
உருவாக்கப்பட்டது.
- தற்காலத்தில் நீளத்தை அளவிடப்
பயன்படுத்தப்படும் அளவுகோல், பதினாறாம்
நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற
அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1 கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள
செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச
எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான
அனைத்துலக நிறுவனத்தால் 1889 முதல்
வைக்கப்பட்டுள்ள, பிளாட்டினம்-இரிடியம்
உலோகக் கலவையால் ஆன ஒரு
உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.
விசையும் இயக்கமும்
Notes will be uploaded for this lesson soon...
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Notes will be uploaded for this lesson soon...
தாவர உலகம் (Updated On: May 7, 2024)
- தாவரங்களின் வேர்த் தொகுப்புகள் இரண்டு
வகைப்படும், அவை:
அ. ஆணிவேர்த் தொகுப்பு
ஆ. சல்லிவேர்த் தொகுப்பு
- பூக்கும்
தாவரங்கள் இரண்டு முக்கியத் தொகுப்புகளைக்
கொண்டுள்ளன. அவை:
1. வேர்த் தொகுப்பு
2. தண்டுத் தொகுப்பு
- விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து
வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது.
முளைவேர் தடித்த முதல்நிலை வேராக
வளர்கிறது.
- முதல்நிலை வேர், சிறிது காலத்தில் அழிந்து,
தண்டின் அடிப்பகுதியில், சம பருமனுள்ள
வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன.
பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில்
இவ்வேர்த்தொகுப்பு காணப்படுகிறது.
எ.கா. நெல், புல், மக்காச் சோளம்.
- கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள்,
தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின்
வேர்களில் சேமிக்கின்றன.
- நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற தாவரப்
பகுதிக்கு தண்டுத் தொகுப்பு என்று பெயர்.
இதன் மைய அச்சு தண்டு என அழைக்கப்படும்.
- தண்டு பூமியின் மேற்பரப்பில் சூரியனை
நோக்கி வளர்கிறது. தண்டில் கணுக்களும்,
கணுவிடைப் பகுதிகளும் உள்ளன. தண்டில்
இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும்.
- இலையின் அடிப்பகுதிக்கும்,
தண்டிற்கும் இடையே உள்ள கோணம்
இலைக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.
இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு
கோண மொட்டு எனப்படும்.
- தண்டு மற்றும் இலையை இணைக்கும்
காம்புப் பகுதியே இலைக் காம்பு எனப்படும்.
பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்
தாள் அல்லது இலைப் பரப்பு என்று பெயர்.
- ஒருசில
இலைகளின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய
பக்கவாட்டு வளரிகள் உள்ளன. அவற்றிற்கு
இலையடிச் செதில்கள் என்று பெயர்.
- விக்டோரியா
அமேசோனிக்கா என்ற
தாவரத்தின் இலைகள்
மூன்று மீட்டர் விட்டம்
வரை வளரக்கூடியவை.
நன்கு வளர்ச்சியடைந்த இலையின்
மேற்பரப்பு 45 கிலோகிராம் எடை அல்லது
அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும்
திறன் கொண்டது.
- பூவின் அடிப்படையில், தாவரங்களை
இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை;
பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத்
தாவரங்கள் ஆகும்.
- விதை அமைந்திருக்கும்
அடிப்படையில் தாவரங்களை
இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய
விதைத் தாவரங்கள் - விதைகள்
கனிகளில் புதைந்திருக்கும்) மற்றும்
ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத்
தாவரங்கள் - விதைகள் கனிகளில்
புதைந்திருக்காது).
- தாமரையின் இலைக்
காம்பில் உள்ள காற்று
இடைவெளிகள் (Air
Spaces) அவை நீரில் மிதக்க உதவுகின்றன.
- பூமியின் மொத்த
ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ்
தாவரங்களில் நடைபெறுகிறது.
- உலகில் மிக நீளமான
நதி நைல் நதியாகும். இது
6,650 கி.மீ. நீளம் உடையது.
இந்தியாவின் மிக நீளமான
நதி கங்கையாகும். இதன் நீளம் 2,525 கி.மீ.
- உலகில் 28% நில வாழிடங்கள் உள்ளன.
உதாரணம்: பசுமைமாறாக் காடுகள், முட்புதர்
காடுகள்.
- நிலவாழிடங்கள் மூன்று வகைப்படும். அவை:
அ. காடுகள்
ஆ. புல்வெளிகள்,
இ. பாலைவனங்கள்.
- 470 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
உருவான நிலவாழ்த்
தாவரங்கள், மாஸ்கள்
மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும்.
- தென் அமெரிக்காவிலுள்ள அமேசான்
மழைக் காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன்
தேவையில் பாதியை உற்பத்திசெய்கின்றன.
- ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர் மாதம் முதல்
திங்கட்கிழமை உலக வாழிட
நாளாக அனுசரிக்கப்படுகிறது.
- பாலைவன வாழிடங்களின்
வகைகள் :
1. வெப்பமான வறண்ட பாலைவனங்கள்
2. மித வெப்பமான பாலைவனங்கள்
3. கடல் சார்ந்த பாலைவனங்கள்
4. குளிர் பாலைவனங்கள்
- மணல் குன்றுகளால் ஆன
மிகப் பெரிய பாலைவனமான
தார் பாலைவனம் இந்திய
துணைக் கண்டத்தில் உள்ளது. இதன்
ஒரு பகுதி வடமேற்கு இந்தியாவிலுள்ள
ராஜஸ்தானிலும், மற்றொரு பகுதி கிழக்கு
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து
மாகாணத்திலும் காணப்படுகிறது.
விலங்குலகம்
Notes will be uploaded for this lesson soon...
உடல் நலமும் சுகாதாரமும்
Notes will be uploaded for this lesson soon...
கணினி – ஓர் அறிமுகம்
Notes will be uploaded for this lesson soon...
வெப்பம்
Notes will be uploaded for this lesson soon...
மின்னியல்
Notes will be uploaded for this lesson soon...
நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Notes will be uploaded for this lesson soon...
காற்று
Notes will be uploaded for this lesson soon...
செல்
Notes will be uploaded for this lesson soon...
மனித உறுப்பு மண்டலங்கள்
Notes will be uploaded for this lesson soon...
கணினியின் பாகங்கள்
Notes will be uploaded for this lesson soon...
காந்தவியல்
Notes will be uploaded for this lesson soon...
நீர்
Notes will be uploaded for this lesson soon...
அன்றாட வாழ்வில் வேதியியல்
Notes will be uploaded for this lesson soon...
நமது சுற்றுச்சூழல்
Notes will be uploaded for this lesson soon...
அன்றாட வாழ்வில் தாவரங்கள்
Notes will be uploaded for this lesson soon...
வன்பொருளும் மென்பொருளும்
Notes will be uploaded for this lesson soon...
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Add Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!