8th Science
அளவீட்டியல் (Updated On: May 18, 2024)
- 1. FPS முறை: (நீளம் - அடி, நிறை - பவுண்ட்
மற்றும் காலம் - வினாடி).
2. CGS முறை: (நீளம் - சென்டி மீட்டர், நிறை -
கிராம் மற்றும் காலம் - வினாடி).
3. MKS முறை: நீளம் - மீட்டர், நிறை -
கிலோகிராம் மற்றும் காலம் - வினாடி).
- CGS, MKS மற்றும் SI அலகு முறைகள்
மெட்ரிக் அலகுமுறை வகையைச்
சார்ந்தவை. ஆனால் FPS அலகுமுறை
மெட்ரிக் அலகுமுறை அல்ல. இது ஆங்கில
இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்.
- செவ்வாய் கோளின் காலநிலை
பற்றிய தகவல்களைச்
சேகரிப்பதற்காக 1998 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின்
தேசிய வானியல் மற்றும் விண்வெளி
நிர்வாகம் (National Aeronautics and Space
Administration- NASA) 'Mars Climate
Orbiter' எனும் சுற்றுக்கலத்தை அங்கு
அனுப்பியது.
- ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,
செவ்வாய் கோளை நெருங்கி வந்தபோது,
சுற்றுக்கலமானது 1999, செப்டம்பர் 23
அன்று கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து
- ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி
இயக்க ஆற்றலே‘வெப்பநிலை’ என்று
வரையறுக்கப்படுகிறது.வெப்ப நிலையின் SI
அலகு ‘கெல்வின்’ ஆகும்.
- மின்னூட்டம் ‘கூலூம்’ என்ற அலகினால்
அளவிடப்படுகிறது. மின்னோட்டத்தின் SI அலகு
’ஆம்பியர்’ ஆகும். இது‘A’ என்ற எழுத்தால்
குறிக்கப்படுகிறது.
- மின்னோட்டமானது,
‘அம்மீட்டர்’ என்றகருவியின் மூலம் அளக்கப்படுகிறது.
- ஒளி
மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு
திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின்
அளவு ‘ஒளிச்செறிவு’ எனப்படும். ஒளிச்செறிவின்
SI அலகு ‘கேண்டிலா’ஆகும். இதனை ‘Cd’ என்ற
குறியீட்டால் குறிக்கலாம்.
- ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி
உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI
அலகு ‘லுமென்’ (lumen) எனப்படும்.
- குவார்ட்ஸ் கடிகாரங்கள் ‘குவார்ட்ஸ்‘ எனப்படும் படிகத்தினால்
கட்டுப்படுத்தப்படும்‘மின்னணு அலைவுகள்’
(Electronic Oscillations) மூலம் இயங்குகின்றன.
எனவே, குவார்ட்ஸ் கடிகாரங்கள்
இயந்திரவியல் கடிகாரங்களைவிட மிகவும்
துல்லியமானவை. இக்கடிகாரங்களின் துல்லியத்
தன்மையானது 109 வினாடிக்கு ஒரு வினாடி என்ற
அளவில் இருக்கும்.
- அணுக்கடிகாரங்கள்
இக்கடிகாரங்கள்
அணுவின் உள்ளே ஏற்படும்
அதிர்வுகளை அடிப்படையாகக்
கொண்டு செயல்படுகின்றன.
இவை 1013 வினாடிக்கு ஒரு
வினாடி என்ற அளவில்
துல்லியத்தன்மை கொண்டவை.
- இவை பூமியில்
இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (GPS), பூமியில்
வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பு
(GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு
அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
- கிரீன்விச் சராசரி நேரம் (GMT)
என்பது இங்கிலாந்து நாட்டின்
லண்டன் மாநகருக்கு அருகில்,
கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல்
வானியல் ஆய்வுமையத்தின் (Royal Astronomical
Observatory) நேரமாகும். இது 0° தீர்க்கக்
கோட்டில் கணக்கிடப்படுகிறது.
- இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில்
உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின்
வழியாகச் செல்லும்
தீர்க்கக் கோட்டை
ஆதாரமாகக் கொண்டு
இந்திய திட்ட நேரம்
கணக்கிடப்படுகிறது.
இக்கோடானது 82.5°
(கிழக்கு) தீர்க்கக் கோட்டில்
அமைந்துள்ளது.
IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி
- 6.023 × 1023 எனும் எண் அவோகேட்ரா எண்
என்றும் வழங்கப்படுகிறது.
விசையும் அழுத்தமும் (Updated On: May 18, 2024)
- அழுத்தம் என்ற இயற்பியல் அளவைப்
பயன்படுத்தி விசை ஏற்படுத்தும் விளைவை
அளக்கலாம். ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர்
புறப்பரப்பின்மீது செங்குத்தாகச் செயல்படும் விசை
அல்லது உந்து விசை ’அழுத்தம்’ என
வரையறுக்கப்படுகிறது.
- அழுத்ததின் SI அலகு பாஸ்கல் (பிரெஞ்ச் அறிவியல்
அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் நினைவாக) ஆகும்.
- மணலில் நடப்பது நமக்கு
கடினமானது. ஆனால்
ஒட்டகங்களுக்கு அது மிகவும்
எளிதானது. ஏனெனில், ஒட்டகத்தின் அகன்ற
பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன்
தொடர்பு கொள்கின்றன. இதனால் அழுத்தம்
குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது.
- ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) என்பது
பாதரசமானியில் உள்ள 76 செ.மீ உயரமுடைய
பாதரசத்தால் செலுத்தப்படும் அழுத்தம் என்று
வரையறுக்கப்படுகிறது. இதன் மதிப்பு 1.01×105 Nm-2
- SI அலகு முறையில் 1 atm = 1,00,000 பாஸ்கல்
(தோராயமாக) ஆகும். வளிமண்டல அழுத்தத்தின்
SI அலகு நியூட்டன்/மீட்டர்2 அல்லது பாஸ்கல்.
- திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு
செங்குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை என
வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு Nm-1
- பாகியல்
விசை CGS அலகு முறையில் பாய்ஸ் என்ற
அலகாலும், SI அலகுமுறையில் Kgm-1s-1 அல்லது
Nsm-2 என்ற அலகாலும் அளக்கப்படுகிறது.
- வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும்
கருவி பாதரசமானி ஆகும்.
- உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
அவை: நிலை உராய்வு மற்றும் இயக்க
உராய்வு. இயக்க உராய்வானது, நழுவு
உராய்வு மற்றும் உருளும் உராய்வு என மேலும்
வகைப்படுத்தப்படுகிறது.
ஒளியியல்
Notes will uploaded for this lesson soon.
பருப்பொருள்கள்
Notes will uploaded for this lesson soon.
நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
Notes will uploaded for this lesson soon.
நுண்ணுயிரிகள்
Notes will uploaded for this lesson soon.
தாவர உலகம்
Notes will uploaded for this lesson soon.
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
Notes will uploaded for this lesson soon.
தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்
Notes will uploaded for this lesson soon.
வெப்பம்
Notes will uploaded for this lesson soon.
மின்னியல்
Notes will uploaded for this lesson soon.
காற்று
Notes will uploaded for this lesson soon.
அணு அமைப்பு
Notes will uploaded for this lesson soon.
இயக்கம்
Notes will uploaded for this lesson soon.
வளரிளம் பருவமடைதல்
Notes will uploaded for this lesson soon.
கணினி வரைகலை
Notes will uploaded for this lesson soon.
ஒலி
Notes will uploaded for this lesson soon.
காந்தவியல்
Notes will uploaded for this lesson soon.
அண்டமும் விண்வெளி அறிவியலும்
Notes will uploaded for this lesson soon.
நீர்
Notes will uploaded for this lesson soon.
அமிலங்கள் மற்றும் காரங்கள்
Notes will uploaded for this lesson soon.
அன்றாட வாழ்வில் வேதியியல்
Notes will uploaded for this lesson soon.
பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
Notes will uploaded for this lesson soon.
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு
Notes will uploaded for this lesson soon.
காட்சித் தொடர்பியல்
Notes will uploaded for this lesson soon.
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!