Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

7th Social Lessons

7th Social

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (Updated On: May 11, 2024)

  • கடந்த காலத்தை மறுபதிவு செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
  • பொறிப்புகள், (கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்), நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும் முதல்நிலைச் சான்றுகள் ஆகும்.
  • இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் ஆகியன இரண்டாம் நிலைச்சான்றுகள் ஆகும்.
  • பொறிப்புகள் (Inscriptions) என்பன பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்.
  • 13ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாக குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.
  • வேளாண் வகை -> பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்.
  • பிரம்மதேயம் பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • சாலபோகம் கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • தேவதானம் கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • பள்ளிச் சந்தம் சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள்.
  • இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப்பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனாரக்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள் ஆகியவை வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சிறந்த சான்றுகளாகும்.
  • குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்- கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளாகும்.
  • [ஆக்ரா கோட்டை, சித்தூர் கோட்டை, குவாலியர் கோட்டை, டெல்லி செங்கோட்டை[ மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம் (டெல்லி) ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
  • முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
  • டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள ’ஜிட்டல்’ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
  • இல்துமிஷ் அறிமுகம் செய்த ’டங்கா’ எனப்படும் வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமதுபின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளன.
  • ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது ஆகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
  • சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது.
  • ‘கம்ப ராமாயணம்’, சேக்கிழாரின் ‘பெரியபுராணம்’, பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட ’தேவாரம்’, மாணிக்கவாசகரின் ’திருவாசகம்’ ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
  • ஜெயதேவரின் ’கீதகோவிந்தம்’ (12ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும்.
  • கங்காதேவியால் இயற்றப்பட்ட ’மதுரா விஜயம்’, கிருஷ்ணதேவராயரின் ’அமுக்த மால்யதா’ ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனிநபர்களையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.
  • சந்த்பார்தையின் ’பிருதிவிராஜ ராசோ’ ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
  • இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ’ராஜதரங்கிணி’ (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.
  • அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் என்பார் ’தபகத்-இ-நஸிரி’ எனும் நூலை எழுதினார்.
  • ஹசன் நிஜாமி என்பார் ’தாஜ்-உல்-மா-அசிர்’ எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது.
  • முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர் ஜியா- உத்-பரணி, ’தாரிக்-இ-பிரோஷாகி’ எனும் நூலைப் படைத்தார்.
  • பெரிஷ்டாவின் (16ஆம் நூற்றாண்டு) தாரிக்-இ-பெரிஷ்டா இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்றது.
  • தபகத் - அரேபியச் சொல் இதற்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
  • தஜூக் - பாரசீகச் சொல் இதற்கு சுயசரிதை எனப்பொருள்.
  • தாரிக்/தாகுயூக் - அரேபியச் சொல் இதன் பொருள் வரலாறு என்பதாகும்.
  • 16ஆம் நூற்றாண்டில் பாபரின் ’பாபர் நாமா’, அபுல் பாசலின் ’அயினி அக்பரி’, ’அக்பர் நாமா’ ஆகிய நூல்கள் இவ்விரு பேரரசர்கள் குறித்த முழுமையான விவரங்களை எடுத்துரைக்கின்றன.
  • 17ஆம் நூற்றாண்டில் தனது வாழ்க்கை நினைவுகளாக ஜஹாங்கீர் ”தசுக்-இ-ஜாஹாங்கீரி” எனும் நூலை எழுதியுள்ளார்
  • நிஜாமுதீன் அகமத் என்பவரால் ”தபகத்-இ-அக்பரி” எனும் நூல் எழுதப்பட்டது.
  • பதானி எழுதிய மற்றொரு நூலான ”தாரிக்-இ- பதானி” (பதானியின் வரலாறு) ஒரு மிகச் சிறந்த நூலாகும். 1595இல் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. அக்பருடைய ஆட்சியைப் பற்றி பேசுகிற தொகுதி, அவரின் நிர்வாகம் தொடர்பாக, குறிப்பாக மதக்கொள்கை குறித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறது.
  • 13ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார்.
  • அவர் தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
  • கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின்போது அவருடன் அல்-பரூனி (11ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்து இங்குப் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்.
  • ”தாகுயூக்-இ-ஹிந்த்” என்ற தனது நூலில் இந்தியாவின் நிலைகளையும் அறிவு முறையினையும், சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
  • அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு, எகிப்தைக் கடந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார்.
  • அவருடைய பயணநூல் [(ரிக்ளா பயணங்கள்)] அவர் பயணம் செய்த நாடுகளையும் மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.
  • நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி 1420இல் விஜயநகர் வந்தார்.
  • 1443இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து (மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்) அப்துர் ரஸாக் விஜயநகருக்கு வந்தார்.
  • போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் 1522இல் விஜய நகருக்கு வருகை தந்தார்.

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் (Updated On: June 1, 2024)

  • ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும்.
  • சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ஜெய ஸ்தம்பா எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.
  • ‘ராஜபுத்’ எனும் சொல் ‘ரஜ்புத்ர’ எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • ராஜபுத்ரர் என்பதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும்.
  • ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர். அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் ‘சூரிய வம்சி’ எனும் சூரிய குலம், ‘சந்திர வம்சி’ எனும் சந்திர குலம், அக்னி குலம் (நெருப்பிலிருந்து தோன்றியவர்கள்) என்பனவாகும்.
  • சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர்.
  • ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.(பொ.ஆ)1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
  • அவற்றுள் நான்கு குலங்கள் சிறப்புத்தகுதி பெற்றவையாகும். அவர்கள் பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் என்றழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காணச் சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்), பவாரைச் சேர்ந்த பரமாரர்கள் எனப்படுவோராவர். இந்நான்கு குலமரபினரும் அக்னிகுலத் தோன்றல்கள் ஆவர்.
  • ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர(பிரதிகார) அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார்.
  • பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார்.
  • கி.பி எட்டாம் நூற்றாண்டில் பரூச், ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த அவர் தனது ஆட்சிப்பரப்பைக் குவாலியர் வரை விரிவுபடுத்தினார்.
  • பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர். அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர்.
  • அவருடைய மகன் தர்மபாலர், பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கினார். கன்னோஜுக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை அவர் மேற்கொண்டார்.
  • தர்மபாலரைத் தொடர்ந்து அவருடைய மகன் தேவபாலர் ஆட்சிப்பொறுப்பேற்றார். அவர் பாலர்களின் ஆட்சிஅதிகாரத்தைக் கிழக்கு நோக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார்.
  • ‘‘தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்’’ என வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார்.
  • முதலாம் மகிபாலர் பால வம்சத்தின் மிகச் சிறந்த, வலிமை மிக்க அரசர் ஆவார். அவர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
  • சௌகான்கள் கி.பி.(பொ.ஆ) 956 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர். இந்த ராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் என்பவராவார். இவர் ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகின்றார்.
  • சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலைசிறந்தவரெனக் கருதப்படுகின்றார். அவர் 1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.
  • 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  • பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் பிருதிவிராஜ ராசோ எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார்.
  • கஜுராகோ எனும் இடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில் , அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தில்வாரா சமணக்கோவில், மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தர்யா கோவில் ஆகியன ராஜபுத்திரர்களின் கோவில் கட்டடக்கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும்.
  • ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவில் உள்ள ஓசியான் என்னுமிடத்தில் பதினாறு இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன.
  • பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றியவராவர். பௌத்தக் கோவில்களையும் புகழ்பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா ஆகிய பல்கலைக்கழகங்களையும் அவர்கள் பரந்த மனப்பான்மையுடனும் ஈகைக் குணத்தோடும் ஆதரித்தனர்.
  • பெயரும் புகழும் பெற்ற பௌத்தத் துறவியும், திபெத்திய பௌத்தத்தைச் சீர்திருத்தம் செய்தவருமான அதிசா (981 – 1054) விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தார்.
  • ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும். ரக்ஷா எனில் பாதுகாப்பு என்றும், பந்தன் என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும். இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும்.
  • 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
  • ஒரு சமய நம்பிக்கையாக இஸ்லாம் அரேபியாவிலுள்ள மெக்காவில் தோன்றியது. இதனைத் தோற்றுவித்தவர் இறைதூதர் முகமது நபிகள் நாயகமாவார்.
  • ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது.
  • கலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும்.
  • கஜினி மாமூது இந்தியாவின் மீது சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
  • கஜினி மாமூத், ஷாகி அரசுக்கு(பஞ்சாப் முதல் காபூல் வரை) எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்.
  • அவருக்குப்பின் வந்த ஆனந்தபாலர் கஜினி மாமூதுக்கு எதிராகப் போரிட்டார். 1008ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் ஆனந்தபாலர் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டன.
  • 1018ஆம் ஆண்டில் கஜினி மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார்.
  • கி.பி. 1024இல் கஜினி மாமூது முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்து சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார்.
  • கஜினி மாமூது மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள் சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
  • இப்படையெடுப்பே இந்தியாவின் மீதான அவரின் இறுதிப் படையெடுப்பாகும். கி.பி.1030இல் கஜினி மாமூது மரணமடைந்தார்.
  • கோர் பகுதியைச் சேர்ந்த முகமது அல்லது முகமது கோரி கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர்.
  • கி.பி. (பொ.ஆ) 1175இல் முல்தானைக் கைப்பற்றிய அவர் அடுத்தடுத்த படையெடுப்புகளின் மூலம் ஒட்டுமொத்த முல்தானையும் கைப்பற்றினார். 1186இல் பஞ்சாப்பைத் தாக்கி அதனைக் கைப்பற்றினார்.
  • பிருதிவிராஜ் சௌகான் 1191இல் டெல்லிக்கு அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.
  • இப்போர் முதலாம் தரெய்ன் போர் என்று அழைக்கப்படுகிறது.
  • 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமது கோரி அவரைக் கைது செய்து கொன்றார்.
  • இவ்வாறு இந்தியாவில் ஆஜ்மீரில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது.
  • கி.பி. (பொ.ஆ) 1206இல் முகமதுகோரி இயற்கை எய்தினார்
  • இந்தியாவிலிருந்த அவருடைய திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக் முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த பின்னர் தன்னை டெல்லியின் முதல் சுல்தான் எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார்.

தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் (Updated On: June 1, 2024)

  • பண்டைய சோழ அரசு காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது. அதன் தலைநகர் உறையூர் (இன்றைய திருச்சிராப்பள்ளி) ஆகும்.
  • ஒன்பதாம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த விஜயாலயன் சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார். அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக ஆக்கினார்.
  • பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின்வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர்.
  • முதலாம் ராஜராஜன் (கி.பி (பொ.ஆ) 985-1014) சோழப்பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார்.
  • அவர் புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார்.
  • அவருடைய மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் (கி.பி.(பொ.ஆ) 1014-1044) தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார்.
  • முதலாம் ராஜேந்திரன் வட இந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார். கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
  • அவருடைய கடற்படை ஸ்ரீவிஜயப்பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற அவருக்குத் துணைபுரிந்தது.
  • மூன்றாவதாகப் பதவி ஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
  • அதிராஜேந்திரனின் மறைவைக் கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார்.
  • 1279இல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
  • இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும்.
  • சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • சமணசமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.
  • வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர்.
  • வேளாளரில் ஒரு பிரிவினரான உழுகுடி என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது.
  • உழுகுடி மக்கள் பிரம்மதேய, வேளாண்வகை நிலங்களில் வேளாண்பணிகளைச் செய்யவேண்டியிருந்தது.
  • மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் மேல்வாரத்தைப் (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர்.
  • உழுகுடிகள் கீழ்வாரத்தைப் (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர். ‘அடிமை’ மற்றும் ‘பணிசெய் மக்கள்’ என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர்.
  • சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர்.
  • சிவபெருமானின் திருவிளையாடல்கள் சைவ அடியார்களான நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட அவை திருமுறைகள் என அழைக்கப்படுகின்றன.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
  • இன்றைய புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும், இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன.

டெல்லி சுல்தானியம்

Notes will be uploaded soon for this lesson...

புவியின் உள்ளமைப்பு

Notes will be uploaded soon for this lesson...

நிலத்தோற்றங்கள்

Notes will be uploaded soon for this lesson...

மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Notes will be uploaded soon for this lesson...

சமத்துவம்

Notes will be uploaded soon for this lesson...

அரசியல் கட்சிகள்

Notes will be uploaded soon for this lesson...

உற்பத்தி

Notes will be uploaded soon for this lesson...

விஜயநகர், பாமினி அரசுகள்

Notes will be uploaded soon for this lesson...

முகலாயப் பேரரசு

Notes will be uploaded soon for this lesson...

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Notes will be uploaded soon for this lesson...

வளங்கள்

Notes will be uploaded soon for this lesson...

சுற்றுலா

Notes will be uploaded soon for this lesson...

மாநில அரசு

Notes will be uploaded soon for this lesson...

ஊடகமும் ஜனநாயகமும்

Notes will be uploaded soon for this lesson...

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Notes will be uploaded soon for this lesson...

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Notes will be uploaded soon for this lesson...

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Notes will be uploaded soon for this lesson...

கண்டங்களை ஆராய்தல் -வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

Notes will be uploaded soon for this lesson...

நிலவரைபடத்தை கற்றறிதல்

Notes will be uploaded soon for this lesson...

இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிகைகளை புரிந்துகொள்ளல்

Notes will be uploaded soon for this lesson...

பெண்கள் மேம்பாடு

Notes will be uploaded soon for this lesson...

சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Notes will be uploaded soon for this lesson...

சாலை பாதுகாப்பு

Notes will be uploaded soon for this lesson...

வரியும் அதன் முக்கியத்துவமும்

Notes will be uploaded soon for this lesson...

Add Comments


Comments

No comments yet for this lesson. Be the first to comment!

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section