Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

6th Tamil

6th Tamil

இன்பத்தமிழ் (Updated On: July 9, 2024)

  • சொல்லும் பொருளும் நிருமித்த - உருவாக்கிய, விளைவு - வளர்ச்சி சமூகம் - மக்கள் குழு, அசதி - சோர்வு
  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
  • இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • test content onemar sdmin tamil

தமிழ்க்கும்மி (Updated On: May 7, 2024)

  • சொல்லும் பொருளும் ஊழி – நீண்டதொரு காலப்பகுதி, உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை, ஆழிப் பெருக்கு - கடல் கோள், மேதினி - உலகம்
  • பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

வளர்தமிழ் (Updated On: May 7, 2024)

  • உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.
  • தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.
  • தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.
  • தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் "வலஞ்சுழி" எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
  • உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
  • ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு. அவையாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
  • ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு. சான்றாக ‘மா’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.
  • இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

கனவு பலித்தது (Updated On: May 7, 2024)

  • கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.
  • போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
  • சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது.
  • தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது. "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்"
  • தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் **மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம் **இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. **இஸ்ரோவின் மேனாள் தலைவர் டாக்டர் கை. சிவன்.

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் (Updated On: May 7, 2024)

  • தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து. • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம்
  • ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
  • உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
  • அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன. *** ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.
  • மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
  • • குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 1 மாத்திரை • நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 2 மாத்திரை
  • மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
  • மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
  • ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு அரை மாத்திரை

சிலப்பதிகாரம் (Updated On: May 7, 2024)

  • சொல்லும் பொருளும், திங்கள் - நிலவு, கொங்கு - மகரந்தம், அலர் - மலர்தல், திகிரி - ஆணைச்சக்கரம், பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில், மேரு - இமயமலை, நாமநீர் - அச்சம் தரும் கடல், அளி - கருணை,
  • சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காணி நிலம் (Updated On: May 7, 2024)

  • சொல்லும் பொருளும்** காணி - நில அளவைக் குறிக்கும் சொல், மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள், சித்தம் - உள்ளம்.
  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • இவர் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

சிறகின் ஓசை (Updated On: May 7, 2024)

  • பறவைகள் பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
  • நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  • உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.
  • நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.
  • பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
  • ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார் . அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
  • சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
  • சிட்டுக்குருவி கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • துருவப் பகுதிகள் தவிர, மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
  • இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோ டி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார் . அதனால், அவர் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
  • டாக்டர். சலீம் அலி தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘ சிட்டுக் குருவியின் வீழ்ச்சி ’(The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
  • காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தம் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.
  • மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி.
  • பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
  • உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20
  • உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் ஆர்டிக் ஆலா

கிழவனும் கடலும் (Updated On: May 7, 2024)

  • கிழவனும் கடலும் ( The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப் புதினம் 1954 ஆ ம் ஆண் டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.

முதலெழுத்தும் சார்பெழுத்தும் (Updated On: May 7, 2024)

  • எழுத்துகள் இரண்டு வகைப்படும், 1. முதல் எழுத்துகள். 2. சார்பு எழுத்துகள்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபெடை. 4. ஒற்றளபெடை. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 9. மகரக்குறுக்கம். 8. ஒளகாரக்குறுக்கம். 10. ஆய்தக்குறுக்கம்.
  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • ஆய்த எழுத்துக்கு , முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • ஃ ஆனது தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

திருக்குறள் (Updated On: May 7, 2024)

  • திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
  • வான்புகழ் வள்ளுவர்,தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, திருக்குறள்
  • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
  • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.* ************************* உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.

அறிவியல் ஆத்திசூடி (Updated On: May 7, 2024)

  • ”தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
  • இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

அறிவியலால் ஆள்வோம் (Updated On: May 7, 2024)

  • வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - பாரதியார்

கணியனின் நண்பன் (Updated On: May 7, 2024)

  • காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
  • ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.
  • 1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது.
  • “உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சோபியா’.
  • ஐக்கிய நாடுகள் சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னு ம் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.

ஒளி பிறந்தது (Updated On: May 7, 2024)

  • தமிழில் அப்துல் கலாமுக்கு பிடித்த நூல் திருக்குறள். அதுபோல் ‘லிலியன் வாட்சன்’ எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலும் மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றதாக கூறியுள்ளார்.

மொழிமுதல், இறுதி எழுத்துகள் (Updated On: May 22, 2024)

  • மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு . சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
  • க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

மூதுரை (Updated On: May 22, 2024)

  • சொல்லும் வ்பொருளும் -> மாசற – குற்றம் இல்லாமல், சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்நதால், தேசம் - நாடு
  • மூதுரையின் ஆசிரியர் ஔவையார்.இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளை கூறுவதால் இந்நூல் மூதுரை எஎனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

துன்பம் வெல்லும் கல்வி

No points available for this lesson.

கல்விக்கண் திறந்தவர்

No points available for this lesson.

நூலகம் நோக்கி

No points available for this lesson.

இன எழுத்துகள்

No points available for this lesson.

ஆசாரக்கோவை

No points available for this lesson.

கண்மணியே கண்ணுறங்கு

No points available for this lesson.

தமிழர் பெருவிழா

No points available for this lesson.

மனம் கவரும் மாமல்லபுரம்

No points available for this lesson.

மயங்கொலிகள்

No points available for this lesson.

திருக்குறள்

No points available for this lesson.

நானிலம் படைத்தவன்

No points available for this lesson.

கடலோடு விளையாடு

No points available for this lesson.

வளரும் வணிகம்

No points available for this lesson.

உழைப்பே மூலதனம்

No points available for this lesson.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

No points available for this lesson.

பாரதம் அன்றைய நாற்றங்கால்

No points available for this lesson.

தமிழ்நாட்டில் காந்தி

No points available for this lesson.

வேலுநாச்சியார்

No points available for this lesson.

நால்வகைச் சொற்கள்

No points available for this lesson.

பராபரக் கண்ணி

No points available for this lesson.

நீங்கள் நல்லவர்

No points available for this lesson.

பசிப்பிணி போக்கிய பாவை

No points available for this lesson.

பாதம்

No points available for this lesson.

பெயர்ச்சொல்

No points available for this lesson.

திருக்குறள்

No points available for this lesson.

ஆசிய ஜோதி

No points available for this lesson.

மனிதநேயம்

No points available for this lesson.

முடிவில் ஒரு தொடக்கம்

No points available for this lesson.

அணி இலக்கணம்

No points available for this lesson.

திருக்குறள்

No points available for this lesson.

Add Comments


Comments

University boy

Super

Posted on: 2024-05-08 17:52:40

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section