Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

8th Grade Tamil Lessons

8th Tamil

தமிழ்மொழி வாழ்த்து (Updated On: May 7, 2024)

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்.
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
  • கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
  • சொல்லும் பொருளும் நிரந்தரம் - காலம் முழுமையும், வண்மொழி – வளமிக்கமொழி வைப்பு – நிலப்பகுதி, இசை – புகழ், சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை, இருள், தொல்லை – பழமை, துன்பம்

தமிழ்மொழி மரபு (Updated On: May 7, 2024)

  • சொல்லும் பொருளும்--> விசும்பு – வானம், மரபு – வழக்கம், மயக்கம் - கலவை, திரிதல் – மாறுபடுதல், இருதிணை – உயர்திணை, அஃறிணை, செய்யுள் – பாட்டு, வழாஅமை – தவறாமை, தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்), ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  • வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர்.
  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
  • இளமைப் பெயர்கள் --> புலி - பறழ் , சிங்கம் - குருளை , யானை - கன்று , பசு - கன்று , ஆடு - குட்டி.
  • ஒலி மரபு--> புலி - உறுமும், சிங்கம் - முழங்கும், யானை - பிளிறும், பசு - கதறும், ஆடு - கத்தும்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி (Updated On: May 7, 2024)

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
  • காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
  • கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.
  • தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். அரச்சலூர் கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
  • பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர் . அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.
  • நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்கா லத்தில் துணைக்கால் (ா) பயன்படுத்தப்படுகிறது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்கா லத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
  • எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
  • அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (ே), இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (ே ா) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

சொற்பூங்கா (Updated On: May 7, 2024)

  • தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள். சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை. நெல்லில் பதர் உண்டு. ஆனால் சொல்லில் பதர் இருத்தலாகாது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர் கூற்று.
  • மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.
  • உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார்; நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
  • ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்.
  • மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட மாஞாலம் என்கிறோம்.
  • மாநிறம் என மாந்தளிர் நிறத்தை ஒப்புமை காட்டி உரைப்ப து பெருவழக்கு. மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
  • அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்; அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
  • ஏவு என்னும் சொல் ‘ஏ’ என்று ஆனது மட்டுமன்றி ‘எய்’ எனவும் ஆயிற்று. ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி. அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.
  • செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
  • திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.

எழுத்துகளின் பிறப்பு (Updated On: May 7, 2024)

  • உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
  • எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
  • க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
  • ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
  • ட், ண் - ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
  • த், ந் - ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
  • ப், ம் - ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
  • ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
  • பறவைகளின் ஒலிமரபு--> ஆந்தை அலறும், குயில் கூவும், மயில் அகவும், காகம் கரையும் , கோழி கொக்கரிக்கும் , கிளி பேசும் சேவல் கூவும், புறா குனுகும், கூகை குழறும்
  • ஒலிபிறப்பியல் – Articulatory phonetics ,உயிரொலி - Vowel மெய்யொலி – Consonant, அகராதியியல் – Lexicography, மூக்கொலி – Nasal consonant sound, ஒலியன் – Phoneme, கல்வெட்டு – Epigraph, சித்திர எழுத்து - Pictograph

ஓடை (Updated On: May 7, 2024)

  • சொல்லும் பொருளும்--> தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல், பயிலுதல் – படித்தல் ஈரம் – இரக்கம், நாணம் – வெட்கம், முழவு – இசைக்கருவி, செஞ்சொல் – திருந்திய சொல், நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம், புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம், வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
  • தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.
  • இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

கோணக்காத்துப் பாட்டு (Updated On: May 18, 2024)

  • சொல்லும் பொருளும்-> முகில் - மேகம், வின்னம் - சேதம், கெடிகலங்கி - மிக வருந்தி, வாகு - சரியாக, சம்பிரமுடன் - முறையாக, காலன் - எமன், சேகரம் - கூட்டம், மெத்த - மிகவும், காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்ப ட்டன.

நிலம் பொது

Notes will be uploaded for this lesson soon...

வெட்டுக்கிளியும் சருகுமானும் (Updated On: May 18, 2024)

  • பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை ‘ஆல்அலப்பு’ என்று அழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.

வினைமுற்று (Updated On: May 18, 2024)

  • படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, சென்ற, கண்டு ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும். செயலை வினை என்றும் குறிப்பர். இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
  • மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும். இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்றுஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
  • வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
  • ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
  • தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.
  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
  • வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும்.

திருக்குறள் (Updated On: May 18, 2024)

  • பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
  • திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல் , ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.
  • திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்; எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல். திருக்குறளின் பெருமையை விளக்க,‘திருவள்ளுவ மாலை’ என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும்.
  • சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. இதில் அமைந்துள்ள அணி உவமை அணி
  • வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. அணி : இல்பொருள் உவமை அணி
  • வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். அணி : உவமை அணி.
  • கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. அணி : பிறிது மொழிதல் அணி.

நோயும் மருந்தும் (Updated On: May 18, 2024)

  • சொல்லும் பொருளும் -> தீர்வன - நீங்குபவை, திறத்தன - தன்மையுடையன, உவசமம் - அடங்கி இருத்தல், கூற்றவா - பிரிவுகளாக, நிழல்இகழும் - ஒளிபொருந்திய, பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே, பேர்தற்கு - அகற்றுவதற்கு, பிணி - துன்பம், திரியோகமருந்து - மூன்று யோகமருந்து, ஓர்தல் - நல்லறிவு, தெளிவு - நற்காட்சி, பிறவார் - பிறக்கமாட்டார்
  • நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப்பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

வருமுன் காப்போம் (Updated On: May 18, 2024)

  • ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.
  • சொல்லும் பொருளும் நித்தம் நித்தம் - நாள்தோறும் , வையம் - உலகம், மட்டு - அளவு, பேணுவையேல் - பாதுகாத்தால், சுண்ட - நன்கு, திட்டுமுட்டு - தடுமாற்றம்.
  • கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

தமிழர் மருத்துவம்

Notes will be uploaded for this lesson soon...

தலைக்குள் ஓர் உலகம்

Notes will be uploaded for this lesson soon...

எச்சம்

Notes will be uploaded for this lesson soon...

படை வேழம்

Notes will be uploaded for this lesson soon...

விடுதலைத் திருநாள்

Notes will be uploaded for this lesson soon...

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

Notes will be uploaded for this lesson soon...

அறிவுசால் ஔவையார்

Notes will be uploaded for this lesson soon...

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Notes will be uploaded for this lesson soon...

ஒன்றே குலம்

Notes will be uploaded for this lesson soon...

மெய்ஞ்ஞான ஒளி

Notes will be uploaded for this lesson soon...

அயோத்திதாசர் சிந்தனைகள்

Notes will be uploaded for this lesson soon...

மனித யந்திரம்

Notes will be uploaded for this lesson soon...

யாப்பு இலக்கணம்

Notes will be uploaded for this lesson soon...

திருக்குறள்

Notes will be uploaded for this lesson soon...

உயிர்க்குணங்கள்

Notes will be uploaded for this lesson soon...

இளைய தோழனுக்கு

Notes will be uploaded for this lesson soon...

சட்டமேதை அம்பேத்கர்

Notes will be uploaded for this lesson soon...

பால் மனம்

Notes will be uploaded for this lesson soon...

அணி இலக்கணம்

Notes will be uploaded for this lesson soon...

திருக்குறள்

Notes will be uploaded for this lesson soon...

Comments


Comments

test

8T

Posted on: 2024-05-07 17:19:33

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section