Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

9th Social

9th Class Social

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் (Updated On: May 12, 2024)

  • மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ செய்பொருள் (artefact) என்று அழைக்கப்படுகிறது.
  • தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
  • தொல்மானுடவியல் (Palaeoanthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து புதைப் படிமங்கள் வழி ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
  • ஆஸ்ரோலோபித்திசின்கள் என்ற குரங்கினத்தில் இருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது.
  • கிரேக்கத்தின் ஹெரோடோடஸ் (கி.மு. (பொ.ஆ.மு.) 484–425) வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார்.
  • மண்ணடுக்கியல் – Stratigraphy - இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை, உறவுமுறைகள் குறித்து ஆராயும் இயல்.
  • உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம்– என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் மெசபடோமியாவில் கி.மு. (பொ.ஆ.மு.) 530இல் அமைக்கப்பட்டது.
  • இளவரசி என்னிகால்டி, நவீன பாபிலோனிய அரசரான நபோனிடசின் மகள் ஆவார்.
  • பொ.ஆ. 1471இல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப் பழமையான அருங்காட்சியகமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
  • இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது பொ.ஆ. 1677ல் உருவாக்கப்பட்டதாகும்.
  • சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் தோற்றம்" (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.
  • நாம் “ஹோமோ சேப்பியன்ஸ்” என்ற இனத்தைச் சேர்ந்தவர்களாவோம்.
  • மனிதர்களுடன் சிம்பன்சி, கொரில்லா, உராங்உட்டான் ஆகிய உயிரினங்களை கிரேட் ஏப்ஸ் (GreatApes) என அழைக்கப்படும் பெருங்குரங்குகள் வகை என்று குறிப்பிடுகிறார்கள்.
  • சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்!
  • மனிதர்களின் மூதாதையர்கள் ஹோமினின் என்றழைக்கப்படுகின்றனர்,
  • ஆப்பிரிக்காவின் கிரேட் ரிஃப்ட் (பெரும் பிளவுப்) பள்ளத்தாக்கில் பல இடங்களில் தொல்பழங்காலம் குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.
  • மனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட தொடக்ககாலக் கற்கருவிகள் கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ளன.
  • மனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோலோ பித்திசின்கள்) சுத்தியல் கற்களை பயன்படுத்தினர், மேலும் “பிளேக்ஸ்” (flakes) எனப்படும் கற்செதில்களை உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள்.
  • அச்சூலியன் (Acheulian) - இவ்வகைக் கைக்கோடரிகள் முதன்முதலில் பிரான்சில் உள்ள செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனவே இவை அச்சூலியன் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • லெவலாய்சியன் (லெவலவா) கருவிகள் – கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட கருவிகள். இவை முதலில் கண்டெடுக்கப்பட்ட பிரான்சில் உள்ள லெவலவா (லெவலாய்ஸ்) என்ற இடத்தின் பெயரை ஒட்டி இப்பெயர் பெற்றன.
  • நவீன மனிதர்கள் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் சப்- சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் தோன்றினர்.
  • வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.
  • தற்காலத்திற்கு 8,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் பனிக்காலம் ஆகும்.
  • பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது.
  • வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் சுமார் கி.மு. (பொ.ஆ.மு.) 10,000லிருந்து கி.மு. (பொ.ஆ.மு.) 5,000ற்குள் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
  • கோதுமை, பார்லி, பட்டாணி ஆகியவை 10000 ஆண்டுகளுக்கும் முன்பே பயிரிடத் தொடங்கப்பட்டுவிட்டன.
  • காய்-கனி மற்றும் கொட்டை தரும் மரங்கள் கி.மு. (பொ.ஆ.மு.) 4000 ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை, மாதுளை, திராட்சை அவற்றில் அடங்கும்.
  • எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது ‘பிறை நிலப்பகுதி’ (Fertile Crescent Region) எனப்படுகிறது.
  • காஸ்மிக்-கதிர் பாய்ச்சி கணித்தல் – மாதிரிகளின் காலத்தைக் கணிக்க காஸ்மோஜெனிக் கதிர்களை வெளிப்படுத்தி அறியும் முறை.
  • பொ.ஆ. 1863இல் சர். இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்.
  • அவர் கண்டெடுத்த கருவிகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.
  • பழங்கால மக்கள் சுத்தியல் கற்களையும், கோளக் கற்களையும் கூடப் பயன்படுத்தினார்கள். அதற்காகக் குவார்சைட் வகை கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கருவிகள் மணல் திட்டுகளிலும் ஆற்றங்கரைகளிலும் காணப்படுகின்றன. அவை பல்லாவரம், குடியம் குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை வெட்டிப்பாளையம், பரிக்குளம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
  • கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இப்பகுதி மக்கள் செய்பொருட்களுக்கு பசால்ட் எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • பசால்ட் பாறைகள்: இவை எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். பூமிக்கடியில் இருந்து வெளிப்படும் உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து தோன்றியவை எரிமலைப்பாறைகள் ஆகும்.
  • இடைக்கற்காலத்தின் வேட்டையாடி – உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் சென்னை, வட ஆற்காடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
  • தூத்துக்குடி அருகே உள்ள ‘தேரி’ பகுதிகளில் இடைக்கற்கால கற்கருவிகள் பல கிடைத்துள்ளன. இப்பகுதியில் உள்ள சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி ‘தேரி’ என்று அழைக்கப்படும்.
  • புதிய கற்கால பண்பாட்டின் மக்கள் செல்ட் (Celt) என்று அழைக்கப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர்.
  • தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பையம்பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு இந்திய அரசின் தொல்லியல் துறை, அகழாய்வு செய்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் மட்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றும் கிடைத்துள்ளன.
  • தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சாணூர், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசல் எனப் பல இடங்களில் இரும்புக் காலத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் டோல்மென் எனப்படும் கற்திட்டை, சிஸ்ட் எனப்படும் கல்லறைகள், மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக் கல், தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள், சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
  • எகிப்து நாட்டின் பெரேனிகே (Berenike), குசேர் அல் காதிம் (Quseir al Qadhim) ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி (Khor Rori) என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்டைய நாகரிகங்கள் (Updated On: May 12, 2024)

  • கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் எகிப்தை “நைல் நதியின் நன்கொடை” என்று குறிப்பிட்டார்.

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் (Updated On: May 13, 2024)

  • எட்டுத்தொகை நூல்களாவன: (1) நற்றிணை (2) குறுந்தொகை (3) பரிபாடல் (4) பதிற்றுப்பத்து (5) ஐங்குறுநூறு (6) கலித்தொகை (7) அகநானூறு (8) புறநானூறு
  • பத்துப்பாட்டு நூல்களாவன: (1) திருமுருகாற்றுப்படை (2) பொருநராற்றுப்படை (3) பெரும்பாணாற்றுப்படை (4) சிறுபாணாற்றுப்படை (5) முல்லைப் பாட்டு (6) நெடுநல்வாடை (7) மதுரைக் காஞ்சி (8) குறிஞ்சிப் பாட்டு (9) பட்டினப்பாலை (10) மலைபடுகடாம்
  • ஐம்பெருங்காப்பியங்கள் (1) சிலப்பதிகாரம் (2) மணிமேகலை (3) சீவகசிந்தாமணி (4) வளையாபதி (5) குண்டலகேசி
  • கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது ‘கல்வெட்டியல்’ ஆகும்.
  • தமிழ்நாட்டில் மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைவாழிடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இன்றும் காணலாம்.
  • முல்லைநில மக்களின் தலைவன் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டுக் கால்நடைகளைக் கவர்ந்து வருவதுண்டு. இதை எதிர்த்து போரிடுபவரும் உண்டு. அப்போது இறந்துபடும் வீரர்களைத் தியாகிகளாகப் போற்றி அவர்களின் நினைவாக நடுகற்களை நிறுவினர்.
  • தேனி மாவட்டத்தின் புலிமான்கோம்பை, தாதப்பட்டி ஆகிய இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்க கால நடுகற்கள் காணப்படுகின்றன.
  • பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் முல்லை நிலப்பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றன. குறிப்பாக,திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற ஊரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இத்தகைய நடுகற்களைக் காணலாம்.
  • தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை) ஆகும்.
  • 2006ஆம் ஆண்டில் புலிமான்கோம்பையிலிருந்து தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றில் “கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்” எனும் செய்தி காணப்படுகிறது. இதன் பொருள்: “கூடலூரில் ஆநிரை கவர்ந்தபோது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்”
  • பிராகிருதம் மௌரியர் காலத்தில் வடஇந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி.
  • தமிழ்நாட்டில் அரிக்கமேடு , அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டிணம், கொற்கை, வசவசமுத்திரம் ஆகிய இடங்களிலும், கேரளத்தின் பட்டணம் என்ற இடத்திலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலிருந்து சங்க கால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிட்டியுள்ளன.
  • புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்க காலத் துறைமுகப்பட்டிணம் ஆகும்.
  • பிரிட்டனைச் சேர்ந்த சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர், பிரான்சைச் சேர்ந்த ஜே.எம். கசால், நம் நாட்டின் ஏ. கோஷ், கிருஷ்ண தேவா ஆகிய தொல்லியல் அறிஞர்கள் இங்கே அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
  • இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு இந்தியப் புதையல் சட்டம் (1878), பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் (1972), பழமையவாய்ந்த நினைவுச்சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சியப் பொருட்கள் சட்டம் (1958) ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன.
  • முதன்முதலாக, சங்க காலத்தில்தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
  • கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன.
  • ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன.
  • அழகன்குளம், கரூர், மதுரை ஆகிய இடங்களிலும் அவை கிடைத்துள்ளன. சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் (Treasure) நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
  • கட்டி வடிவிலான (ingots) தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் புல்லியன் (bullion) என்று அழைக்கப்படுகிறது.
  • மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் பொருளாதாரம் குறித்தும் ஆட்சிமுறைமை குறித்தும் எடுத்துரைக்கிறது. ‘பாண்டிய காவாடகா’ என்ற அந்நூலின் குறிப்பு பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள், கடற்பொருள்களைக் குறிப்பதாக இருக்கலாம்.
  • இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது.
  • எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் (Periplus of Erythrean Sea) என்பது பண்டைய கிரேக்க நூலாகும். இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
  • பெரிப்ளஸ் என்றால் கடல் வழிகாட்டி என்று பொருள். மாலுமிகள் இவ்வழிகாட்டிகளைக் கடற்பயணத்திற்குப் பயன்படுத்தினர்.
  • முசிறி, தொண்டி, குமரி, கொற்கை ஆகிய சங்ககாலத் துறைமுகப்பட்டிணங்கள் குறித்தும் சேர, பாண்டிய அரசர்கள் குறித்தும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன.
  • ரோமானியரான மூத்த பிளினி என்பவர் ‘இயற்கை வரலாறு’ என்ற நூலை எழுதினார். லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இந்நூல், ரோமானியப் பேரரசின் இயற்கை வளங்கள் குறித்து விவரிக்கிறது.
  • கேரளக் கடற்கரையில் இருந்த பக்காரே (Bacare) துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • பிளினி, வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அருகில் உள்ள ஓசலிஸ் (Ocealis) துறைமுகத்திலிருந்து பருவக் காற்று (தென்மேற்குப் பருவக்காற்று) சரியாக வீசினால் நாற்பது நாள்களில் இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
  • இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள், நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணமே தாலமியின் புவியியல் என்ற நூலாகும்.
  • இதில் காவிரிப்பூம்பட்டிணம்(Khaberis Emporium), கொற்கை (Korkoi), கன்னியாகுமரி (Komaria), முசிறி (Muziris) ஆகிய துறைமுகப்பட்டிணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.
  • வியன்னா பாப்பிரஸ் என்பது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணமாகும். இதில் முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்பு உள்ளது.
  • இந்த ஆவணம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், ஆஸ்திரிய தேசிய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாப்பிரஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
  • ஹெர்மாபோலோன் (Hermapollon) என்ற பெயருடைய கப்பல், ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியான மிளகு, தந்தம் போன்ற சரக்குகள் குறித்த பட்டியல் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன.
  • அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய பிராமி வரிவடிவத்திற்கு அசோகன் பிராமி என்று பெயர்.
  • சங்க காலச் செய்யுள்களை பொருண்மை அடிப்படையில் பொதுவாக அகத்திணைப் பாடல்கள் என்றும் புறத்திணைப் பாடல்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • அகத்திணை என்பதுகாதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் குறிக்கும். புறத்திணை என்பது வாழ்வின் பிற அம்சங்களையும் குறிப்பாக, போர், வீரம் முதலிய பொருள்களைப் பேசுகிறது.
  • வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநிலமன்னர்கள் ஆவர்.
  • மௌரியப் பேரரசர் அசோகர் கலிங்கத்தையும் (ஒடிசா ) ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளையும் படையெடுத்து வென்றார்.
  • அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சிபுரிந்தனர்.
  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
  • சேரர்கள் பனம்பூ மாலை அணிந்தனர். கரூரை அடுத்த புகளூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது. மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கரூரில் கிடைத்துள்ளன.
  • காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
  • காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டிணம் அவர்களுடைய துறைமுகப்பட்டிணமாக விளங்கியது.
  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்க காலப் புலவர் காவிரிப்பூம்பட்டிணம் குறித்துப் பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார்.
  • கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கத்தை திறம்படப் பயன்படுத்திப் பாசன வசதிகளைப் பெருக்கிப் பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகைசெய்த பெருமைக்குரியவர் ஆவார்.
  • சோழர்களின் இலச்சினை புலி. அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
  • மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை பாண்டியர்கள் ஆண்டனர்.
  • மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
  • நெடியோன், முடத்திருமாறன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள்.
  • பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
  • குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற குழுக்கள் குலம் அடிப்படையிலான சமுதாயங்களாக (clan based communities) இருந்தனர்.
  • ஐவகை நிலச் சூழல் மற்றும் செய்தொழில் அடிப்படையில் மக்கள் சமூகக் குழுக்களாக் காணப்பட்டனர்.
  • பாணர் குலப் பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை நிலப்பகுதிகளைச் சார்ந்த பெண்கள் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார்.
  • ஆற்றுவடிநீர்ப் பகுதிகளிலும் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளால் பாசனவசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டன.
  • தானியங்கள் புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டன.
  • செந்நெல், வெண்நெல், ஐவனநெல் எனப் பலவகையான நெல்கள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலன்கள் ’கலம் செய்கோ' என அழைக்கப்பட்டவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன.
  • கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • சுத்துக்கேணி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்களிலும், அரிக்கமேடு, கீழடி, பட்டணம் ஆகிய பழங்கால நகரங்களிலும் தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.
  • அரிக்கமேட்டிலும், கடலுருக்கு அருகில் குடிக்காடு என்ற ஊரிலும் கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன.
  • நூல் நூற்கும் கதிர் (Spindle whorl) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
  • தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன.
  • உப்பு வணிகர்கள் உமணர்கள் எனப்பட்டனர். அவர்கள் தம் குடும்பத்தோடு மாட்டு வண்டியில் சென்று வணிகம் செய்தனர்.
  • கடற்பயணம் மேற்கொள்ள உதவிய கலம், பஃறி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய் போன்றவை கடற்போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது
  • கிரேக்க, ரோமானிய, மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தியர்கள் யவனர் என்று அழைக்கப்படுகின்றனர். யவனர் என்னும் சொல் கிரேக்கப் பகுதியான ‘அயோனியா’விலிருந்து வந்தது.
  • செங்கடல் கடற்கரையில் உள்ள பெர்னிகே துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகைத் துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
  • செங்கடல் கடற்கரையில் பெர்னிகே துறைமுகத்திற்கு வடபகுதியில் உள்ள இன்னொரு துறைமுகம் குசேர் அல் காதிம் என்பதாகும்.
  • ‘பெரும் பத்தன் கல்’ என்ற பெயரில் தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது.
  • அந்தக் கல், தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் ஆகும்.
  • கொடுமணல், தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் இவ்வூர் எனக் கருதப்படுகிறது.
  • மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சிலைமான் என்ற ஊருக்கு அருகில் கீழடி உள்ளது.
  • பள்ளிச் சந்தைத்திடல் என்று அழைக்கப்படும் பரந்த தென்னந்தோப்பில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலம் சங்க காலத்து நகரம் புதையுண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • பொருநை (தாமிரபரணி) தமிழ் நாட்டின் ஒரே வற்றாத ஆறாகும். இது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்கிறது. பொருநை ஆற்றின் கரையில்அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில்1876இல் ஜெர்மானிய பரப்பாய்வாளர் டாக்டர் ஜாகோர் என்பவரால் அகழாய்வு நடத்தப்பெற்றது.பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தார்.

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் (Updated On: May 14, 2024)

  • கி.மு.(பொ.ஆ.மு) 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள் இருவர் தோன்றினர்.
  • கன்பூசியஸ் கி.மு. (பொ.ஆ.மு). 551இல் சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் பிறந்தார்.
  • கன்பூசியஸ் ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார். 1. ஆவண நூல் - இது மனித சமூகத்தை நெறிப்படுத்தும் அறவியல் கோட்பாடுகளைக் கூறுகிறது. 2. இசைப்பாடல் நூல் - ஒழுக்க நெறிமுறைகளைப் பாடல் வடிவில் கூறுகிறது. 3. மாற்றம் குறித்த நூல் - மெய்ப்பொருளியல் பற்றிப் பேசுகிறது. 4. இளவேனிலும் இலையுதிர் காலமும் - அரசியல் ஒழுக்க நெறி பற்றிக் கூறுகிறது. 5. வரலாற்று நூல்- சீனாவின் பண்டைய மதங்கள் பற்றிய நிகழ்வுகளையும் புராணக்கதைகளையும் கூறுகிறது.
  • கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள் 1. மனிதத்தன்மை 2. நேர்மை 3. நன்னடத்தை 4. மெய்யறிவு 5. நம்பகத்தன்மை
  • மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
  • கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
  • கன்பூசிய காலக்கட்டத்திற்கு முந்தைய தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் லாவோட்சே.
  • கன்பூசியஸை விட 53 வயது மூத்தவர். லாவோட்சே கி.மு. (பொ.ஆ.மு). 604இல் பிறந்தார்.
  • அவரது நூலான தாவோ டே ஞிங் என்பது வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும்.
  • லாவோட்சேவின் போதனைகள் (தாவோயிசம்)
  • மிகப் பழமையான உலக மதங்களில் ஜொராஸ்ட்ரியனிசமும் ஒன்று. கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டில் செழித்தோங்கி, மத்தியக் கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய மூன்று மாபெரும் பாரசீகப் பேரரசுகளுக்கு அரச மதமாக அது இருந்தது.
  • ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
  • ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தார்.
  • ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும்.
  • அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, 2. நல்ல மனம், 3. நன்மை, 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்.
  • ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலி, உருவ வழிபாடு ஆகியவை இல்லை. கடவுளின் வடிவமாகத் தீயை வணங்குவதுதான் உயர்ந்த வழிபாட்டு முறையாகக் கருதப்பட்டது. தானம் செய்வதற்கும் ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
  • வைசாலி, சிராவஸ்தி, இராஜகிருஹம், கௌசாம்பி, காசி ஆகியவை கங்கைச் சமவெளியின் சில முக்கியமான வர்த்தக மையங்களாகும்.
  • ரிக் வேதத்தைத் தொடர்ந்து யஜுர், சாம, அதர்வண வேதங்கள் எழுதப்பட்டன.
  • ரிக்வேதப் பாடல்களின் விளக்கங்கள் அடங்கிய ஆரண்யகங்களும் உபநிடதங்களும் கி.மு. (பொ.ஆ.மு). 1000 - 600 காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன.
  • வர்த்தமான மகாவீரர் வைஷாலிக்கு அருகே உள்ள குந்தகிராமத்தில் கி.மு. (பொ.ஆ.மு). 599இல் பிறந்தார்.
  • அவருடைய தாய் திரிசலை , லிச்சாவி இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார்.
  • மகாவீரர், யசோதா என்ற இளவரசியை மணந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
  • துறவற வாழ்வின் பதின்மூன்றாவது ஆண்டில் அவர் உயரிய ஞானத்தை (கைவல்யம்) அடைந்தார். அப்போது முதல் அவர் ஜீனர் (உலகை வென்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • சமணர்கள், அவர் தீர்த்தங்கரர்களின் நீண்ட பரம்பரையில் வந்தவர் என்றும் அவர்தான் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் கருதினார்கள்.
  • ரிஷபர் என்பவர்தான் முதல் தீர்த்தங்கரர். பார்சுவநாதர் என்பவர் மகாவீரருக்கு முந்தைய இருபத்துமூன்றாவது தீர்த்தங்கரர்.
  • மகத மன்னர்களான பிம்பிசாரரும், அஜாதசத்ருவும் அவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டார்கள்.
  • மகாவீரர் மகதம், விதேகம், அங்கம் ஆகிய நாடுகளில் விரிவாகப் பயணம் செய்து உபதேசம் செய்தார்.
  • 30 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, கி.மு. (பொ.ஆ.மு). 527இல் தமது 72வது வயதில் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மகாவீரர் காலமானார்.
  • மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கபடும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்:
  • 1. நன்னம்பிக்கை - மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  • நல்லறிவு - கடவுள் இல்லை, என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது, படைத்தவன் - இன்றியே உலகம் இயங்கி வருகிறது. அனைத்துப் பொருள்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
  • 3. நன்னடத்தை - இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது. அவையாவன - 1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது 2.நேர்மையுடன் இருப்பது 3. கருணை 4. உண்மையுடன் இருப்பது 5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது
  • வட இந்தியாவில் சமண மதத்திற்குத் தனநந்தர், சந்திரகுப்த மௌரியர், காரவேலன் போன்ற அரசர்களின் ஆதரவு கிடைத்தது.
  • கர்நாடகாவில் உள்ள சிரவண - பெலகொலாவில் உள்ள பாகுபலியின் சிலைதான் ( இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச் சிலை இதுவே ஆகும்.
  • கி.பி.(பொ.ஆ) ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் சமணமும் ஒன்று.
  • பல்லவ மன்னரான மகேந்திர வர்மன் சமண சமயத்தைச் சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்துக்கு மாறினார்.
  • கௌதம புத்தர் இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்தார். அவருடைய தந்தை சாக்கியர்கள் எனும் ஒரு சத்திரிய இனக்குழுவின் தலைவராக இருந்த சுத்தோதனார் ஆவார்.

பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள்

Notes will be uploaded soon for this lesson...

பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள்

Notes will be uploaded soon for this lesson...

வளிமண்டலம்

Notes will be uploaded soon for this lesson...

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Notes will be uploaded soon for this lesson...

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Notes will be uploaded soon for this lesson...

மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

Notes will be uploaded soon for this lesson...

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Notes will be uploaded soon for this lesson...

செவ்வியல் உலகம்

Notes will be uploaded soon for this lesson...

இடைக்காலம்

Notes will be uploaded soon for this lesson...

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Notes will be uploaded soon for this lesson...

நவீன யுகத்தின் தொடக்கம்

Notes will be uploaded soon for this lesson...

நீர்க்கோளம்

Notes will be uploaded soon for this lesson...

உயிர்க்கோளம்

Notes will be uploaded soon for this lesson...

மனித உரிமைகள்

Notes will be uploaded soon for this lesson...

பணம் மற்றும் கடன்

Notes will be uploaded soon for this lesson...

புரட்சிகளின் காலம்

Notes will be uploaded soon for this lesson...

தொழிற்புரட்சி

Notes will be uploaded soon for this lesson...

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Notes will be uploaded soon for this lesson...

மனிதனும் சுற்றுச் சூழலும்

Notes will be uploaded soon for this lesson...

நிலவரைபடத் திறன்கள்

Notes will be uploaded soon for this lesson...

பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்

Notes will be uploaded soon for this lesson...

அரசாங்கங்களின் வகைகள்

Notes will be uploaded soon for this lesson...

உள்ளாட்சி அமைப்புகள்

Notes will be uploaded soon for this lesson...

சாலை பாதுகாப்பு

Notes will be uploaded soon for this lesson...

தமிழக மக்களும் வேளாண்மையும்

Notes will be uploaded soon for this lesson...

இடப்பெயர்தல்

Notes will be uploaded soon for this lesson...

Add Comments


Comments

No comments yet for this lesson. Be the first to comment!

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section