10th Science
இயக்க விதிகள் (Updated On: May 19, 2024)
- அறிவியல் பூர்வமாக விசை என்பதை சர்.
ஐசக்நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மூலம்
விளக்க இயலும்.
- விசையின் செயல்பாட்டால்
பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும்
அறிவியல் பாடம் இயந்திரவியல் ஆகும்.இது இரண்டு
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை நிலையியல்
மற்றும் இயங்கியல் ஆகும்.
- விசையின் செயல்பாட்டால் ஓய்வு
நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப்
பற்றி அறியும் அறிவியல் நிலையியல் ஆகும்
- விசையின் செயல்பாட்டால்
இயக்கநிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும்
விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் இயக்கவியல்
ஆகும். இது மேலும் இரு பிரிவுகளாக கீழ்கண்டவாறு
பிரிக்கப்பட்டுள்ளது.
- இயக்கவியல் என்பது இயக்கத்தை
ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல்
இயக்கத்தினை மட்டுமே விளக்குவது இயக்கவியல்
ஆகும்.
- பொருளின் இயக்கத்தையும்,
அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்குவது
இயக்கவிசையியல் ஆகும்.
- ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன்
செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத
வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது
சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க
நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை
‘நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.
- இயக்க நிலையில் உள்ள பொருள், தமது
இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
இயக்கத்தில் நிலைமம் எனப்படும்.
- இயக்க நிலையில்
உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து
மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
திசையில் நிலைமம் எனப்படும்.
- இயங்கும் பொருளின் நிறை மற்றும்
திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும்.இதன் திசையானது பொருளின் திசைவேக
திசையிலேயே அமையும். இது ஒரு வெக்டார் அளவாகும்.
- நியூட்டனின் முதல் விதி:-
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும்
செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ
அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு
நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
- விசையானது எண்மதிப்பும் திசையும் கொண்ட ஒரு
வெக்டார் அளவாகும்.
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற
விசைகள், ஒரே திசையில் ஒரு பொருள் மீது
இணையாகச் செயல்பட்டால் அவை ஒத்த
இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற
விசைகள், எதிரெதிர் திசையில் ஒரு பொருள் மீது
இணையாகச் செயல்பட்டால் அவை மாறுபட்ட
இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
- ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள்
செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை
ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை ‘தொகுபயன்
விசை’ என்றழைக்கப்படுகிறது.
- தொகுபயன் விசைக்கு சமமான,
ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு
விசையானது, பொருட்களை சம நிலைக்கு
கொண்டுவர உதவுகிறது. இவ்விசையை ‘எதிர்சமனி’
(Equilibrant) என்று அழைக்கப்படுகிறது
- விசையின் SI அலகு நியூட்டன் (N)
ஆகும். அதன் CGS அலகு டைன் (dyne) ஆகும்.
- புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு (கடல்
மட்டத்தில்) 9.8 மீ வி -2
ஆகும்.
ஒளியியல்
No points available for this lesson.
வெப்ப இயற்பியல்
No points available for this lesson.
மின்னோட்டவியல்
No points available for this lesson.
ஒலியியல்
No points available for this lesson.
அணுக்கரு இயற்பியல்
No points available for this lesson.
அணுக்களும் மூலக்கூறுகளும்
No points available for this lesson.
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு (Updated On: May 7, 2024)
- 1912 ஆம் ஆண்டு ஹென்றி மோஸ்லே என்ற
பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்தலுக்கு,
அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற
உண்மையைக் கண்டறிந்தார்.
கரைசல்கள்
No points available for this lesson.
வேதிவினைகளின் வகைகள்
No points available for this lesson.
கார்பனும் அதன் சேர்மங்களும்
No points available for this lesson.
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
No points available for this lesson.
உயிரினங்களின் அமைப்பு நிலைகள் (Updated On: May 7, 2024)
- விலங்குலகம்
(Kingdom Animalia) என்பது முதுகுநாண் உள்ளதன்
அடிப்படையில் முதுகுநாண் அற்றவை மற்றும்
முதுகுநாணுள்ளவை என இரு பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
- அட்டையின் விலங்கியல் பெயர் ஹிருடினேரியா
கிரானுலோசா (Hirudinaria granulosa) என்பதாகும்.
- ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் (Oryctolagues
cuniculus) – முயலின் விலங்கியல் பெயராகும்.
- ஹிருடினேரியா கிரானுலோசா (இந்திய
கால்நடை அட்டை) இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான்,
மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்
காணப்படுகிறது.
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
No points available for this lesson.
நரம்பு மண்டலம்
No points available for this lesson.
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
No points available for this lesson.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
No points available for this lesson.
மரபியல் (Updated On: May 19, 2024)
- மெண்டல் (1822 – 1884) என்ற ஆஸ்திரிய
துறவி மரபியலின் அடிப்படைத் தத்துவங்களைத்
தனது சோதனைகள் மூலம் கண்டுபிடித்தார். அவரது
கண்டுபிடிப்புகள் நவீன மரபியலுக்கு அடித்தளமிட்டன.
- அவர் தனது ஓய்வு நேரத்தில் தோட்டத்தில் உள்ள
பட்டாணிச் செடியில் புகழ்மிக்க வரலாற்றுச்
சிறப்புடைய அவரது சோதனைகளைச் செய்ய
ஆரம்பித்தார். இந்தச் சோதனைகளை மடத்தில்
தங்கியிருந்து 1856 முதல் 1863 வரை ஏழு வருடங்கள்
செய்தார். 34 வகைக்குட்பட்ட 10000 தாவரங்களைத்
தனது சோதனைகளுக்கு உட்படுத்தினார்.
- காரணிகள்
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு
தலைமுறைக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.
காரணிகள் தற்போது ஜீன்கள் என
அழைக்கப்படுகின்றன.
- புன்னட் கட்டம் என்பது R.C புன்னட்டால்
உருவாக்கப்பட்ட சோதனைப் பலகை ஆகும்.
மரபியல் கலப்பில் ஜீனோடைப் எவ்வாறு
உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஒரு
வரைபட முறையாகும்.
- ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
பண்புகளைக் கொண்ட பெற்றோர்களிடையே
கலப்புச் செய்யப்படும்பொழுது முதல் தலைமுறை
சந்ததியில் வெளிப்படும் பண்பு ஓங்குப் பண்பாகும்.
வெளிப்படாத பண்பு ஒடுங்கு பண்பாகும் இது
ஓங்குபண்பு விதி எனப்படும்.
- மரபியலின் குரோமோசோம்களின் பங்கு
பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1993 ஆம்
ஆண்டு T.H மோர்கனுக்கு வழங்கப்பட்டது.
உயிரின் தோற்றமும் பரிணாமமும்
No points available for this lesson.
இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
No points available for this lesson.
உடல் நலம் மற்றும் நோய்கள்
No points available for this lesson.
சுற்றுச்சூழல் மேலாண்மை
No points available for this lesson.
Welcome to our website dedicated to providing essential points and notes
from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience.
Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast
syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most
crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner
stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims
to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes,
tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with
our curated resources and embark on your path to success with confidence.
Comments
Comments
No comments yet for this lesson. Be the first to comment!