Welcome to PupilGrid

Your TNPSC Exam Preparation Companion

6th Grade Social Lessons

6th Social

வரலாறு என்றால் என்ன? (Updated On: May 7, 2024)

  • வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.
  • பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகர் ஆவார். இவரது ஆட்சியில் தான் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது.
  • கலிங்கப் போருக்குப் பின் பல உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி, போர் தொடுப்பதைக் கைவிட்டார். அதற்குப் பிறகு புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
  • வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் அசோகர்தான். உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவரும் அசோகரே ஆவார். இன்றும் அவர் உருவாக்கிய சாலைகளை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
  • நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்தே பெறப்பட்டது.
  • ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களான வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்கள் வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்த வரலாற்றுச் சான்றுகள்தான் மாமன்னர் அசோகரின் சிறப்புகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்தன.
  • சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்துத் தொகுத்து நூலாக வெளியிட்டார். அந்த நூலின் பெயர் ‘The Search for the India’s Lost Emperor’.
  • பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் அசோகரின் பொற்கால ஆட்சி குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தனர். இதற்கான சான்றுகள் சாஞ்சி ஸ்தூபியிலும், சாரநாத் கற்றூணிலும் காணப்படுகின்றன.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி (Updated On: May 7, 2024)

  • மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையைத் தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடியும்.
  • குகையில் வாழ கற்றுக் கொண்ட கு ரோமேக்னான்ஸ் மனிதர்கள் பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.
  • மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்
  • மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. anthropos என்பதன் பொருள் மனிதன். logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.
  • மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும் --> 1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா 2. ஹோமோ ஹேபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா 3. ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா 4. நியாண்டர்தால் - யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) 5. குரோமேக்னான்ஸ் - பிரான்ஸ் 6. பீகிங் மனிதன் - சீனா 7. ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா 8. ஹைடல்பர்க் மனிதன் - லண்டன்
  • தமிழ்நாட்டில் தொல் பழங்கால பாறை ஓவியங்கள், கீழ்வலை(விழுப்புரம்) , உசிலம்பட்டி(மதுரை), குமுதிபதி(கோவை) , மாவடைப்பு(கோவை), பொறிவரை(கரிக்கையூர், நீலகிரி) ஆகிய இடங்களில் காணப்பெறுகின்றன

சிந்து வெளி நாகரிகம் (Updated On: May 9, 2024)

  • ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
  • “அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று ஆகும்
  • கி.பி (பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள் மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
  • 1924இல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
  • ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விடப் பழமையானது என முடிவுக்கு வருகின்றனர்.
  • நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் ‘நகரம்’ ஆகும்.
  • இந்தியத் தொல்லியல் துறை - ASI (Archeological Survey of India). 1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
  • வெண்கலக் காலம் என்பது, மக்கள் வெண்கலத்தாலான பொருள்களைப் பயன்படுத்திய காலம் ஆகும்.
  • மெஹர்கர் - சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி. மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று.
  • சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒன்று மேல் நகர அமைப்பு மற்றொன்று கீழ் நகர அமைப்பு ஆகும்
  • ஹரப்பா நாகரிகத்தில் தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
  • வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாகக் காணப்படுகின்றன.
  • பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும் ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
  • வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
  • மொகஞ்சதாரோவில் இருந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று இது எனலாம்.
  • ஹரப்பாவின் தானியக் களஞ்சியம் செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.இவை தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
  • தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
  • செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
  • தானியக் களஞ்சியம் – செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு. இவை தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
  • ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர்.
  • மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்து வெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது.
  • சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம் – சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
  • தற்கால குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் மேற்கொண்ட கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது.
  • லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
  • மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் – செம்பு.
  • மொகஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. ‘நடன மாது’ என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் “முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டையமக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை . இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன” என்றார்.
  • பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன.
  • ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.
  • சிந்துவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை
  • சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnelian) பயன்படுத்தினர்.
  • மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
  • கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன்14 (c14) முறை என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் (Updated On: May 9, 2024)

  • “பண்டைய தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று. காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள்.
  • துறைமுகங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுதான் பூம்புகார் துறைமுகம் ஆகும். இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை அருகே உள்ளது.
  • பூம்புகார் நகரத்துக்குப் புகார், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களும் உண்டு. சங்க காலச் சோழ அரசின் துறைமுகம் பூம்புகார்.
  • சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை மாநாய்கன். மாநாய்கன் என்றால் பெருங்கடல் வணிகன் என்று பொருள்.
  • நாயகன் கோவலனின் தந்தை மாசாத்துவன். மாசாத்துவன் என்றால் பெருவணிகன் என்று பொருள்.
  • பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள். மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றனர். கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள் கருதினர் என்பதை பட்டினப்பாலை கூறுகிறது.
  • பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கி.மு (பொ.ஆ.மு) 2-ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.
  • “கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி ஆனது. வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அது மெருகூட்டப்பட்டு மீண்டும் அயல்நாட்டுக்கு ஏற்றுமதியானது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும், தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்திலிருந்து உணவுப்பொருள்களும் இறக்குமதியாகின.
  • பண்டைய காலத்தில் மதுரையை முறையே பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் ஆட்சி புரிந்தனர்.
  • சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் 49 பேர்.
  • கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருள்கள் கொண்டு வரப்பட்டன.
  • பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை உவரி என்னுமிடத்திலிருந்து இறக்குமதி செய்தார்.
  • ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது. பிறநாட்டு நாணயங்களும் மதுரையில் அச்சடிக்கப்பட்டது, மதுரையின் புகழுக்கு ஒரு சான்று ஆகும்.
  • புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு.
  • மௌரிய வம்ச அரசனான சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றித் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • மதுரை நகரைச் சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள்கூடச் செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்.
  • “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார். “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
  • புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
  • தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் காஞ்சியாகும்.
  • தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.
  • காஞ்சி, “கோயில்களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள கைலாசநாதர் கோவில் புகழ்பெற்றது.
  • பிற்காலப் பல்லவ மன்னன் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் கட்டினார்.
  • பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தைக் காஞ்சியில் கழித்தார் என்பது இதன் சிறப்புக்கு இன்னொரு சான்று ஆகும்.
  • காஞ்சி நகரைச் சுற்றிலும் நுற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது; இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. இன்றும் காஞ்சிபுரம் ‘ஏரிகளின் மாவட்டம்’ என்று அழைக்கப்படுவதை நாம் அறிவோம்.
  • சேர நாடு –> கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்
  • சோழ நாடு –> தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்
  • பாண்டிய நாடு –> மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
  • தொண்டை நாடு –> காஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி
  • காஞ்சி கோயில்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரம் நீர் மேலாண்மைக்குச் சிறந்த சான்று ஆகும்.

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் (Updated On: May 10, 2024)

  • ‘பெருவெடிப்பு’ (Big Bang) என்ற ஓரு நிகழ்வு ஏற்பட்டதின் காரணமாய் எண்ணிலடங்கா விண்மீன்களும், வான்பொருள்களும் தோன்றின. இவை அனைத்தையும் பொதுவாக ‘பேரண்டம்’(Universe) என்று அழைத்தனர்.
  • பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ‘பிரபஞ்சவியல்’ (Cosmology) என்று பெயர். காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்
  • பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி ஆகும். சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
  • இப்பேரண்டமானது பில்லியன் கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இவற்றுக்கு இடையேயான தூரத்தை அளவிடும் அலகிற்கு ஒரு ஒளியாண்டு என்று பெயராகும்
  • பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 5 பில்லியன் வருடங்களுக்குப் பின் ‘பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் ’(Milky Way Galaxy) உருவானது.
  • நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது. ஆண்ட்ரோமெடா (Andromeda) விண்மீன் திரள் மண்டலம் மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ் (Magellanic Clouds) விண்மீன் திரள் மண்டலம் ஆகியன புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் ஆகும்.
  • ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும். ஆனால், ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
  • சோலார் என்ற சொல்லானது ‘சூரியக் கடவுள்’எனப் பொருள்படும் sol என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
  • சூரியக் குடும்பம் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.
  • சூரியக் குடும்பத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது.
  • சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99.8 சதவிகிதம் உள்ளது.
  • சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது.
  • சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000°C ஆகும்.
  • சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது.
  • சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப்பெரியதாகும்.
  • சூரியக் குடும்பத்தில் எட்டுகோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
  • வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகாரச்சுற்றில், அதாவது மேற்கிலிருந்து கிழக்காக தனது அச்சில் சுற்றி வருகின்றன.
  • பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் சிறுபாணாற்றுப்படையில் காணப்படும் ‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்று பாடல் வரிகளிலிருந்து இதை அறிந்துகொள்ளலாம்
  • சூரியனுக்கு அருகில் உள்ள நான்கு கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ‘உட்புறக் கோள்கள்’ அல்லது ‘புவிநிகர் கோள்கள்’. இவை பாறைகளால் ஆனவை
  • சூரியக்குடும்பத்தில் உள்ள கடைசி நான்கு கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன ‘வெளிப் புறக்கோள்கள்’ அல்லது ‘வியாழன் நிகர் கோள்கள்’ (ஜோவியன்) என்று அழைக்கப்படுகின்றன.
  • இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் ‘வளிமக் கோள்கள்’ (Gaseous Planets) எனவும் அழைக்கப்படுகின்றன.
  • செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையே 'குறுங்கோள் மண்டலம்' காணப்படுகிறது.
  • கோள்களின் வரிசையை நினைவிற் கொள்ள (Mnemonics): புது வெள்ளம் புவியில் செலுத்தினால் விவாதம், சண்டை, யுத்தம் நெருங்காது.
  • சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோள் அளவில் மற்ற கோள்களைவிட மிகவும் சிறியது. இக்கோளானது ரோமானியக் கடவுள்களின் தூதுவரான ‘மெர்குரி’யின் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • புதன் கோளுக்குத்துணைக்கோள்கள் எதுவுமில்லை.
  • வெள்ளி சூரியனிடமிருந்து இரண்டாவதாக அமைந்துள்ளது. புவியைப் போன்றே ஒத்த அளவுள்ளதால் வெள்ளியும் புவியும் 'இரட்டைக் கோள்கள்' என அழைக்கப்படுகின்றன.
  • வெள்ளி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 243 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
  • யுரேனஸைப் போன்றே வெள்ளி கோளும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது (கடிகாரச் சுற்று). இது மற்ற கோள்களைக் காட்டிலும் மிகவும் மெதுவாகச் சுற்றுகிறது.
  • புதன் கோளைப் போன்றே வெள்ளிக்கும் துணைக்கோள்கள் இல்லை. அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய பெண் கடவுளான ‘வீனஸ்’ என்ற பெயரால் இக்கோள் அழைக்கப்படுகிறது.
  • புதன் சூரியனுக்கு அருகில் இருந்தபோதிலும், வெள்ளி மிகவும் வெப்பமான கோள் ஆகும்.
  • சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி ஐந்தாவது பெரிய கோளாகும்.
  • ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால்அழைக்கப்படாத ஒரே கோள் புவியாகும்.
  • புவியின் துருவ விட்டம் 12,714 கிலோமீட்டர் மற்றும் நிலநடுக்கோட்டு விட்டம் 12,756 கிலோமீட்டர் ஆகும்.
  • புவி சூரியனை வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவருகிறது.
  • சூரியனிடமிருந்து நான்காவதாகக் காணப்படும் செவ்வாய் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும்.
  • சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும். மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.
  • சூரியனிடமிருந்து நான்காவதாகக் காணப்படும் செவ்வாய் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும்.
  • செவ்வாய் கோள் ரோமானியப் போர்க்கடவுள் 'மார்ஸ்' (Mars) பெயரால் அழைக்கப்படுகிறது.
  • செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு ஆக்ஸைடு உள்ளதால் செந்நிறமாகத் தோற்றமளிக்கிறது. ஆகவே, செவ்வாய் 'சிவந்த கோள்' என்றும் அழைக்கப்படுகிறது.
  • செவ்வாய் கோள் , ஃபோபஸ் (Phobos) மற்றும் டீமஸ் (Deimos) என்று இரு துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
  • சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோளான வியாழன் சூரியனிடமிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ளது.
  • வியாழன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் வேகமாகச் சுழலக்கூடியதாகும். இக்கோள் வளிமக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • சூரியனைப் போன்றே வியாழனின் வளிமண்டலத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படுகின்றன.
  • வியாழன் மிக அதிகமான துணைக்கோள்களை கொண்டுள்ளது.
  • அயோ (IO), யூரோப்பா (Europa), கனிமீடு (Ganymede) மற்றும் கேலிஸ்டோ (Callisto) ஆகியன வியாழனின் சில மிகப்பெரிய துணைக்கோள்களாகும்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.09.2014 அன்று மங்கள்யான் (Mars Orbiter Mission) எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
  • இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா (USA), ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.
  • சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோளான சனி சூரியனிடமிருந்து ஆறாவதாக அமைந்துள்ளது.
  • ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் (Saturn) இது அழைக்கப்படுகிறது.
  • சனி கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள் ‘டைட்டன்’ (Titan) ஆகும்.
  • சனிக் கோளின் தன் ஈர்ப்புத் திறன் (Specific Gravity) நீரை விடக் குறைவாகும்.
  • வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் 1781ஆம் ஆண்டு யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் யுரேனஸ். இது சூரியனிடமிருந்து ஏழாவதாக அமைந்துள்ளது.
  • மீத்தேன் வாயு யுரேனசில் உள்ளதால் இது பச்சை நிறமாகத் தோன்றுகிறது.
  • வெள்ளிக் கோளைப் போன்றே யுரேனஸ் கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.
  • யுரேனஸின் 27 துணைக்கோள்களில் ‘டைட்டானியா’ (Titania) மிகப் பெரியதாகும்.
  • சூரியக் குடும்பத்தில் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் அமைந்துள்ள கிரகம் நெப்டியூன் ஆகும்.
  • நெப்டியூனின் மிகப் பெரிய துணைக்கோள் ‘டிரைட்டன்’ (Triton) ஆகும்.
  • புளுட்டோ, செரஸ், ஈரிஸ், மேக்மேக் மற்றும் ஹௌமியா போன்றவை சூரியக் குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்களாகும்.
  • நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும், புவியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும். அதாவது 27 நாள்கள் 8 மணி நேரமாகும்.
  • நிலவு புவியிலிருந்து 3,84,400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • வால் விண்மீன்கள் தலை மற்றும் வால் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். திடப் பொருள்களால் ஆன தலைப் பகுதி பனிக்கட்டியால் பிணைக்கப்பட்டுள்ளது. அதன் வால் பகுதி வாயுக்களால் ஆனது.
  • புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய ‘ஹேலி’ வால்விண்மீன் கடைசியாக 1986ஆம் ஆண்டு வானில் தென்பட்டது. இது மீண்டும் 2061ஆம் ஆண்டு விண்ணில் தோன்றும் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • வளிமண்டலத்தைத் தாண்டி புவியின் மேற்பரப்பைத் தாக்கும் விண்கற்கள் ‘விண்வீழ்கற்கள்’ (Meteorites) என்று அழைக்கப்படுகின்றன.
  • புவியின் வட துருவத்திலிருந்து, புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக்கூடிய ஒரு கற்பனைக் கோடு புவியின் அச்சு எனப்படும்.
  • புவி தன் அச்சில் 23(1⁄2)° சாய்ந்து தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
  • தன் சுற்றுவட்டப் பாதைக்கு 66(1⁄2)° கோணத்தை இந்த சாய்வு ஏற்படுத்துகிறது.
  • புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/மணி ஆக உள்ளது.
  • 60° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில் சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.
  • மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலும் புவியானது, ஒருமுறை சுழலுவதற்கு 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
  • நள்ளிரவு சூரியன் என்பது இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்க்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்குமேல் தெரியும் நிகழ்வாகும்.
  • புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ‘ஒளிர்வு வட்டம்’ (Terminator Line) என்று பெயர்.
  • புவி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365(1⁄4) நாள்கள் ஆகிறது. இது தோராயமாக 365 நாள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடம் என்று அழைக்கப்படுகிறது. மீதமுள்ள 1⁄4 நாள்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. அதாவது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்திற்கு 29 நாள்களாக இருக்கும். அந்த வருடம் ‘லீப் வருடம்’ (Leap Year) என்று அழைக்கப்படுகிறது.
  • ‘சூரிய அண்மை புள்ளி’ (Perihelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.
  • 'சூரிய தொலைதூர புள்ளி' (Aphelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வாகும்.
  • மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும். அதனால் புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும். எனவே, இந்நாள்கள் ‘சமப்பகலிரவு’ நாள்கள் என அழைக்கப்படுகின்றன.
  • ஜுன் 21ஆம் நாள் கடகரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுவதால் வட அரைக்கோளத்தில் அந்நாள் மிக நீண்ட பகல்பொழுதைக் கொண்டிருக்கும். தென் அரைக் கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும். இந்நிகழ்வு ‘கோடைக்காலக் கதிர்திருப்பம்' (Summer Solstice) என்று அழைக்கப்படுகிறது.
  • டிசம்பர் 22ஆம் தேதி மகர ரேகையின் மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுகின்றன. இந்நிகழ்விற்கு ‘குளிர்காலக் கதிர்திருப்பம்’ (Winter Solstice) என்று பெயர். இச்சமயத்தில் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது நீண்டு காணப்படும். வட அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும்.
  • ‘‘ஹைட்ரோ” (Hydro) என்ற கிரேக்கச் சொல்லிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் (Hydrosphere)ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.
  • 'அட்மோ' (Atmo) என்ற கிரேக்கப் பதத்திற்கு வளி அல்லது காற்று என்று பொருள். புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படுகிறது.
  • மன்னார் வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் (Updated On: May 10, 2024)

  • இலக்கியத்தில் சங்க இலக்கியத்தில் நிலவகைப்பாடு -> குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும், முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும், மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும், நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும், பாலை - மணலும் மணல் சார்ந்த நிலமும்
  • உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா.
  • உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா ஆகும். ஆஸ்திரேலியா மிகச் சிறிய கண்டமாகும்.
  • புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும்.
  • பசிபிக் பெருங்கடல் மிகப்பெரியது. ஆர்க்டிக் பெருங்கடல் மிகச்சிறியதாகும்.
  • மலைத் தொடர்கள் பல நூறு கிலோ மீட்டர் முதல் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை பரவிக் காணப்படுகின்றன.
  • மலைத்தொடர்களில் ஆசியாவில் உள்ள இமயமலைத்தொடர், வட அமெரிக்காவில் உள்ள ராக்கி மலைத்தொடர் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர் ஆகியவற்றைக் கூறலாம். உலகின் நீளமான மலைத்தொடர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடராகும்.
  • டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும். ஆகவே திபெத் பீடபூமியை “உலகத்தின் கூரை” என்று அழைக்கிறோம்.
  • இந்தியாவில் காணப்படும் சோட்டா நாகபுரி பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
  • தென்னிந்தியாவில் உள்ள தக்காணப் பீடபூமி எரிமலைப் பாறைகளால் ஆனது.
  • தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.
  • இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.
  • புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
  • பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும், கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.
  • உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் (8,848 மீ) மரியானா அகழியில் (10,994 மீ) மூழ்கிவிடும்.
  • பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் “நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
  • ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெரிடினாண்டு மெகெல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.
  • புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும்.
  • அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வடஅமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.
  • போர்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில் வாக்கி அகழி அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாகும்.
  • ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கிறது.
  • கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா, வடகடல், கினியா வளைகுடா, மத்திய தரைக் கடல் போன்றவை அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கிய எல்லையோரக் கடல்களாகும்.
  • செயின்ட் ஹெலனா, நியூபவுண்ட்லாந்து, ஐஸ்லாந்து, ஃபாக்லாந்து உள்ளிட்ட பல தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளன.
  • இந்தியப் பெருங்கடல் புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும்.
  • இப்பெருங்கடல் மேற்கே ஆப்பிரிக்கா வடக்கே ஆசியா,கிழக்கே ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களால் சூழப்பட்டுள்ளது.
  • மலாக்கா நீர்ச்சந்தி இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
  • பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.
  • இந்தியப்பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியாகும்.
  • தென்பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ளது. தென் பெருங்கடல் 60° தெற்கு அட்சத்தால் சூழப்பட்டுள்ளது.
  • ராஸ் கடல், வெடல் கடல் மற்றம் டேவிஸ் கடல் இதன் எல்லையோரக் கடல்களாகும். ஃபேர்வெல் தீவு, பௌமன் தீவு, ஹார்ட்ஸ் தீவு போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன.
  • தென் பெருங்கடலின் ஆழமான பகுதி 'தென் சான்ட்விச் அகழி'
  • ஆர்க்டிக் பெருங்கடல் மிகச் சிறியது ஆகும்.
  • நார்வே கடல், கிரீன்லாந்து கடல், கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட் கடல் போன்றவை இதன் எல்லையோரக் கடல்களாகும். கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத் தீவு மற்றும் நவோயா செமல்யா போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன.
  • ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி ‘யுரேசியன் தாழ்நிலம்’ ஆகும். இதன் ஆழம் சுமார் 5,449 மீட்டர் ஆகும்.

பன்முகத் தன்மையினை அறிவோம் (Updated On: May 10, 2024)

  • மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும்.
  • ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
  • இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், சமண மதம், ஜொராஸ்டிரிய மதம் போன்ற எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தழைத்தோங்கி உள்ளன.
  • பொங்கல், தீபாவளி, ஹோலி, விஜயதசமி, ஆயுத பூஜை, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, விநாயகர் சதுர்த்தி, பிஹு, கும்பமேளா, ஓணம், மிலாது நபி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, குருநானக் ஜெயந்தி மற்றும் ரக்சாபந்தன் போன்ற விழாக்கள் இந்தியாவின் பண்பாட்டுப் பன்முகத்தன்மைக்கான ஆதாரமாக விளங்குகிறது.
  • இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
  • இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீனதிபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும்.
  • தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது.
  • தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன
  • இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் பல்வேறு வகையான இசை வடிவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, தமிழ் செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை, லாவணி இசை மற்றும் கஜல் இசையாகும்.
  • தமிழ்நாடு -> கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம். புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்
  • கேரளா->தெய்யம், மோகினியாட்டம்
  • பஞ்சாப் -> பாங்க்ரா
  • குஜராத் -> கார்பா, தாண்டியா
  • ராஜஸ்தான் -> கல்பேலியா, கூமர்
  • உத்திரப்பிரதேசம் -> ராசலீலா
  • உத்தரகண்ட் -> சோலியா
  • அசாம் -> பிஹு
  • இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது.
  • “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் இச்சொற்றொடரானது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
  • இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்” என வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

சமத்துவம் பெறுதல் (Updated On: May 16, 2024)

  • பாரபட்சம் உருவாவதற்குப் பொதுவான சமூக காரணிகள், 1. சமூகமயமாக்கல் 2. நிர்ணயிக்கப்பட்ட நடத்தை 3. பொருளாதார பயன்கள் 4. சர்வாதிகார ஆளுமை 5. இன மையக் கொள்கை 6. கட்டுப்பாடான குழு அமைப்பு 7. முரண்பாடுகள்
  • தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்.
  • இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார். தெனாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
  • எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) அறிவுறுத்துகிறது.
  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார். இவர் இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
  • இவர் 1915 இல் எம்.ஏ. பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டத்தை பெற்றார். அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் D.Sc பட்டத்தையும் பெற்றிருந்தார்.
  • இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே, இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
  • இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார். இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு ’சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ என்கிறது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 17-ன்படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது.

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் (Updated On: May 24, 2024)

  • வேத கால இலக்கியங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.1.சுருதிகள் ,2.ஸ்மிருதிகள்
  • சுருதிகள் –> நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
  • சுருதி என்பது கேட்டல் (அல்லது எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது;
  • ஸ்மிருதிகள்-> ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய சமயம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும்.
  • 'ஸ்மிருதி' என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
  • “சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
  • வேதகாலம் –இந்திய வரலாற்றில் கி.மு. (பொ.ஆ.மு) 1500 – 600 காலகட்டம். 'வேதங்கள்' என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.
  • ஆரியர்கள் இந்தோ–ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செலலக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
  • ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும். அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டது.
  • நான்கு வேதங்கள்: ரிக், யஜுர், சாம, அதர்வ.
  • ரிக் வேத கால அரசியல் பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு ‘விஸ்’ (குலம்) என்றழைக்கப்பட்டது. இதற்கு விசயபதி தலைவர் ஆவார். ‘ஜனா’ (இனக்குழு)வின் தலைவர் ராஜன் ஆவார். இவர் ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்) எனப்பட்டார். ரிக் வேத காலத்தில் பல இனக்குழு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன. (பரதர், மத்சயர், புரு).
  • பாலி – இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.
  • தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் மூன்று பிரிவுகள் (Treyi) காணப்பட்டன. பொது மக்கள் விஸ் என்று அழைக்கப்பட்டனர். போர்வீரர்கள் சத்ரியர்கள் எனவும் மதகுருமார்கள் பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
  • ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் • தங்கம் (ஹிரண்யா) • இரும்பு (சியாமா) • தாமிரம்/செம்பு (அயாஸ்)
  • ரிக்வேதகால ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர். பிருத்வி (நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடி) போன்றவற்றை வணங்கினர்.
  • குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) ஆகியவற்றின் நலனுக்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர்.
  • பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
  • குருகுலக் கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறை ஆகும். குருகுலம் என்னும் சொல் குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.
  • பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்), கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை), வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்), சன்னியாசம் (வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)
  • தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. அச்சோதனையில் இப்பொருள்கள் கி.மு (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் (Updated On: May 24, 2024)

  • அங்கங்கள் – சமண நூல்கள் திரிபீடகங்கள் மற்றும் ஜாதகங்கள் – பௌத்த நூல்கள்
  • சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. தீர்த்தங்கரர்கள் பல்வேறு காலங்களில் மதம் தொடர்பான உண்மைகளைப் போதித்தோர் ஆவர்.
  • முதல் தீர்த்தங்கரர் ரிஷபர். கடைசித் தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார்.
  • வர்த்தமானர் (செழிப்பு என்று பொருள்) ஒரு சத்திரிய இளவரசர். இருந்தபோதிலும் அவர் தன்னுடைய 30வது வயதில் இளவரசர் என்னும் தகுதியைக் கைவிட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார்.
  • பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்குப் பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார். இந்நிலைக்கு ‘கைவல்ய’ என்று பெயர்.
  • கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார். அவை நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்
  • சமணத்தின் நடத்தை விதிகள்-> அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது, சத்யம் – உண்மையை மட்டுமே பேசுதல் அஸ்தேயம் – திருடாமை, அபரிக்கிரகம்– பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை, பிரம்மச்சரியம் – திருமணம் செய்து கொள்ளாமை
  • மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.
  • சமணம் திகம்பரர், சுவேதாம்பரர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
  • திகம்பரர் பிரிவைச் சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை. நிர்வாணமாக வாழ்ந்தனர். அவர்கள் எந்த விதமான உடைமையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
  • சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்.
  • பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன.
  • மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இமயலையில் காணப்படுகின்றன.
  • மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. இதன் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
  • ஜைனக் காஞ்சி – காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
  • புத்தர் (ஞானம் பெற்ற ஒருவர் என்று பொருள்) மனித வாழ்க்கை முழுவதும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது என உணர்ந்தார். அதனால் 29ஆம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார்.
  • சாக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த துறவி என்பதால் புத்தர் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.
  • வாரணாசிக்கு அருகேயுள்ள, சாரநாத் என்னும் இடத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்தினார். இது தர்ம சக்ர பிரவர்த்தனா அல்லது தர்ம சக்கரத்தின் பயணம் என்று அழைக்கப்படுகின்றது.
  • புத்தரின் எண்வகை வழிகள்-> நல்ல நம்பிக்கை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம்.
  • புத்தரின் போதனைகள் தம்மா என்று குறிப்பிடப்படுகின்றன.
  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். அதில் உறுப்பினர்களாக இருந்த துறவிகள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • பௌத்த மாநாடுகள்-> முதலாவது – இராஜகிருகம், இரண்டாவது – வைசாலி, மூன்றாவது – பாடலிபுத்திரம், நான்காவது – காஷ்மீர்

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை (Updated On: May 26, 2024)

  • கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன. இது நாடோோடி வாழ்க்கை முறையையும், இரத்த உறவுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்த ஒரு சமூகம், வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலம் ஆகும்.
  • 16 மகாஜனபதங்கள்-> குரு, பாஞ்சாலம், அங்கம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், கோசலம், அவந்தி, சேதி, வத்சம், மத்சயம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம்.
  • நான்கு முக்கிய மகாஜனபதங்கள் முறையே:- மகதம் – பீகார், அவந்தி – உஜ்ஜைனி, கோசலம் – கிழக்கு உத்திரப்பிரதேசம், வத்சம் – கோசாம்பி, அலகாபாத்.
  • நான்கு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாக உருவானது.
  • நான்கு அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன. ஹரியங்கா வம்சம், சிசுநாக வம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம்
  • மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
  • பிம்பிசாரர் மகன் அஜாதசத்ரு (புத்தரின் சமகாலத்தவர்) ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
  • இவ்வம்சத்தைச் சேர்ந்த அரசர் காலசோகா தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார். இவர் இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டினார்.
  • நந்தர்களே இந்தியாவில் முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள் ஆவர். முதல் நந்தவம்ச அரசர் மகாபத்ம நந்தர் ஆவார்.
  • கடைசி அரசரான தனநந்தர் சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
  • நாளந்தா பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் ஆகும். குப்தர்களின் காலத்தில் அது மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா என்னும் சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது. இதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.
  • மௌரியப் பேரரசு சான்றுகள்:- முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்,கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சஷம், மாமூலனாரின், அகநானூற்றுப் பாடல்,சமண, பௌத்த நூல்கள், புராணங்கள், வெளிநாட்டுச் சான்றுகள்(தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா.)
  • கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். பதினான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. இந்நூல் மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஒரு முக்கியச் சான்றாகும்.
  • மௌரியப் பேரரசு – இந்தியாவின் முதல் பேரரசு-தலைநகர் பாடலிபுத்திரம்
  • மௌரியப் பேரரசே இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். சந்திரகுப்த மௌரியர் இப்பேரரசை மகதத்தில் நிறுவினார்.
  • பத்ரபாகு எனும் சமணத்துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார். சந்திரகுப்தர் சரவணபெலகொலாவில் (கர்நாடகா) சமணச் சடங்கான சல்லேகனா செய்து உயிர் துறந்தார். (சல்லேகனா என்பது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் ஆகும். இது ஒரு சமணச் சடங்கு முறையாகும்.)
  • பிந்துசாரரின் இயற்பெயர் சிம்ஹசேனா. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் ஆவார்.
  • கிரேக்கர்கள் பிந்துசாரரை அமிர்தகதா என்று அழைத்தனர். அதன் பொருள் எதிரிகளை அழிப்பவன் என்பதாகும்.
  • மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் அசோகர் ஆவார். அவர் தேவனாம்பிரியர் என்றழைக்கப்பட்டார். கடவுளுக்குப் பிரியமானவன் என்பது இதன் பொருள் ஆகும்.
  • அசோகர் கி.மு. (பொ.ஆ.மு.) 261ல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அப்போரில் வென்று கலிங்கத்தைக் கைப்பற்றினார். அப்போரின் பயங்கரத்தை அசோகரே தன்னுடைய 13வது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.
  • “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” H.G. வெல்ஸ் – வரலாற்றிஞர்
  • அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
  • சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
  • அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மத மாநாட்டைக் கூட்டினார்.
  • பேரரசர் அசோகருடைய ஆணைகள் மொத்தம் முப்பத்திமூன்று. அவைகள் அசோகரால் தூண்களிலும், பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரளபுத்திரர் ஆகியோரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.
  • லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளைக் குறிப்பிடுகின்றது.
  • மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவரியாக வசூல் செய்யப்பட்டது.
  • நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 30 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • நகரம் நிர்வாகம் நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது. அவருக்கு ஸ்தானிகா, கோபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.
  • ருத்ரதாமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.
  • மயில், மலை மற்றும் பிறைச் சந்திர வடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் (பணம்), மாஸாகாஸ் என்று அழைக்கப்பட்ட செப்பு நாணயங்கள் ஆகியன அரசினுடைய நாணயங்களாக இருந்தன.
  • யக்ஷன் என்பது நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்ஷி என்பது யக்ஷாவின் பெண் வடிவமாகும்.
  • சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தூணின் சிகரப்பகுதியில் தர்மச்சக்கரம் இடம் பெற்றுள்ளது.
  • புத்தகயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன. பராபர் குன்றிலுள்ள மூன்று குகைகளில் அசோகருடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.

வளங்கள் (Updated On: May 26, 2024)

  • இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும்.
  • இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சிநிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
  • தோற்றத்தின் அடிப்படையில், வளங்களை உயிரியல் வளங்கள் (Biotic Resources) மற்றும் உயிரற்ற வளங்கள் (Abiotic Resources) என வகைப்படுத்தப்படுகிறது.
  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். உதாரணமாக தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்.
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும். உதாரணமாக நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்
  • வளர்ச்சிநிலையின் அடிப்படையில் வளங்களை, கண்டறியப்பட்ட வளங்கள் (Actual Resources) மற்றும் மறைந்திருக்கும் வளங்கள் (Potential Resources) என்று வகைப்படுத்தப்படுகிறது.
  • கடல் ஈஸ்ட்டானது (Marine Yeast) நிலப்பரப்பிலுள்ள ஈஸ்ட்டைவிட (Terrestrial Yeast) மிகுந்த ஆற்றல் உைடயது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.
  • வளத்தினை புதுப்பித்தலின் அடிப்படையில் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் (Renewable Resources) மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் (Non Renewable Resources) என வகைப்படுத்தப்படுகிறது.

தேசியச் சின்னங்கள் (Updated On: May 27, 2024)

  • தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
  • ஆலமரம்-1950 இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது.
  • தாமரை-1950 சேற்று நீரில் வளரும் அழகான மலர் ஆகும்.
  • மயில்-1963 இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது தோகையைக் கொண்ட பறவை மயில்.
  • புலி-1973 பூனை இனத்தில் மிகப்பெரியது. உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா 70% கொண்டுள்ளது.
  • கங்கை ஆறு-2008 இது வற்றாத ஆறு. வரலாற்றுப் புகழ் பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின.
  • யானை-2010 ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • யானை-2010 ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஆற்று ஓங்கில்-2010 தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவின் நிலையை உணர்த்தும் விதமாக செயல்படுகிறது. அருகி வரும் உயிரினமாக உள்ளது.
  • ராஜநாகம் (ஹோபிபாகஸ் ஹானா) உலகில் விஷத்தன்மை கொண்ட மிக நீளமான பாம்பு. இவை இந்தியாவின் மழைக்காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றன.
  • லாக்டோ பேசில்லஸ் 2012 இது ஒரு தோழமை பாக்டீரியா. இது லேக்டிக் மற்றும் பாக்டீரியாக்களின் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மாம்பழம் 1950 வைட்டமின் ஏ, சி, டி யை அதிக அளவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.
  • தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் விலங்கு - வரையாடு, பறவை - மரகதப் புறா, மலர்-செங்காந்தள் மலர், மரம்- பனை மரம்
  • தேசியக்கொடியில் மேல்பகுதியில் உள்ள காவி நிறம் வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. கீழ்ப்பகுதியில் உள்ள பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும், இடையில் உள்ள வெள்ளைநிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • நடுவில் கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.
  • தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டுள்ளது.
  • இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்.
  • சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது.
  • இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
  • இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
  • நான்முக சிங்கத்தின் அடிப்பகுதியில் சத்யமேவ ஜெயதே எனப் பொறிக்கப்பட்டுள்ளது . வாய்மையே வெல்லும் என்பதே இதன் பொருளாகும்.
  • மேலும் அடிப்பகுதியில் யானை (ஆற்றல்), குதிரை (வேகம்), காளை (கடின உழைப்பு), சிங்கம் (கம்பீரம்) ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.
  • அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
  • ஜன கண மன.. நமது தேசிய கீதமாகும். இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1911, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.
  • வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது.
  • தேசிய கீதத்திற்க்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத் தலைவருமான ராஜேந்திர பிரசாத் 1950, ஜனவரி 24 ஆம் நாள் அறிவித்தார்.
  • இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.
  • இந்தியா எனது தாய்நாடு.. எனத் தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.
  • நாம் அன்றாடம் சாப்பிடும் தயிர் பாலிலிருந்து உருவாகப் பயன்படுவது லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி எனும் நுண்ணுயிர். 2012-ம் ஆண்டில் இது தேசிய நுண்ணுயிராக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தியாவின் அதிகாரபூர்வ பணத்தின் பெயர் ரூபாய். 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு ருபியா என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது.
  • இந்திய ரூபாய்க்கான சின்னத்தை 2010-ல் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் வடிவமைத்தார்.
  • பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர் மறைந்த கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள்
  • 1947-லேயே நாடு விடுதலை பெற்றுவிட்டடாலும், அதற்குப் பிறகும் பிரிட்டன் அரசியே இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்துவந்தார். குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசு நாளில் அவர் டெல்லி கர்தவ்யாபாத்தில் (கடமை பாதை) தேசியக் கொடியை ஏற்றுவார்.
  • காந்தியின் பிறந்த நாளைச், சர்வதேச அகிம்சை நாள் ஆக 2007 ல் அங்கீகரித்து ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Updated On: May 27, 2024)

  • நமது அரசியலமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.
  • 1929-ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை (PURNA SWARAJ) அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1930 ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக்(Purna Swaraj Day) கொண்டாடப்பட்டது. பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.
  • அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக முனைவர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”
  • இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் 15 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்
  • ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார். இக்குழுவின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன”.
  • இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத் ரஷ்யா, ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட 60 நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை வாசித்து, அவற்றில் இருந்த சிறப்பான பகுதிகளை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.”
  • அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க 64 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச் சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.
  • சம உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத்தீர்வு பெறும் உரிமை ஆகியவை இன்றியமையாத உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன. தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 28.09.2023 வரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பொருளியல் – ஓர் அறிமுகம் (Updated On: May 27, 2024)

  • உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலைத் தொழில்கள் எனப்படுகிறது. வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், மீன் பிடித்தல், சுரங்கத் தொழில், கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல் மற்றும் மரம் வெட்டுதல்.
  • முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாம் நிலை தொழில்கள் (தொழில் துறை) என்று அழைக்கப்படுகின்றன.
  • வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் – பருத்தி, சர்க்கரை, உணவுபதப்படுத்துதல், காடுசார்ந்த தொழிற்சாலைகள் – காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள், கனிமத் தொழிற்சாலைகள் – சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற் சாலைகள், கடல் சார் தொழிற்சாலைகள் – கடல் உணவு பதப்படுத்துதல்.
  • தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது. இவை மூன்றாம் நிலைத்தொழில்கள் எனப்படுகின்றன.
  • போக்குவரத்து – சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள். தொலைத் தொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம். வர்த்தகம் – பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல். வங்கி – பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள்.

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம் (Updated On: June 6, 2024)

  • சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளைக் ஆட்சி புரிந்தனர். வேந்தர் எனும் சொல் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
  • சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர்.
  • சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தார் எனத் தெரியவந்துள்ளது.
  • பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார்.
  • இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார். அவர்தான் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்.
  • சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார். சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.
  • முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள் உதயன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை
  • சங்க காலத்தில் சோழ அரசு வேங்கடம் (திருப்பதி மலைகள்) வரை விரிந்திருந்தது.
  • சோழஅரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது கரிகாலன் ஆவார்.
  • அவர் ,சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்.
  • வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார்.
  • சோழர்களின் துறைமுகமான புகார், இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களைஅதன்பால் ஈர்த்தது.
  • பட்டினப்பாலை எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
  • முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள் இளஞ்சேட்சென்னி, கரிகால் வளவன், கோச்செங்கணான், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி,
  • பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர். பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர்.
  • நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராகப் போற்றப்படுகிறார். அவர் சேரர், சோழர், ஐந்து வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார்.
  • அவர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார்.
  • பாண்டிய அரசர்கள் பல நாணயங்களை வெளியிட்டனர். அவர்களின் நாணயங்கள், ஒருபுறத்தில் யானையின் உருவத்தையும் மற்றொரு புறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன.
  • சேரர் - பனம்பூ மாலை(மாலை), முசிறி/தொண்டி (துறைமுகம்), வஞ்சி/கரூர் (தலைநகர்), வில்-அம்பு (சின்னம்)
  • சோழர் - அத்திப்பூ மாலை(மாலை), புகார் (துறைமுகம்), உறையூர்/புகார் (தலைநகர்), புலி (சின்னம்)
  • பாண்டியர் - வேப்பம்பூ மாலை(மாலை), கொற்கை (துறைமுகம்), மதுரை (தலைநகர்), மீன் (சின்னம்)
  • சங்க காலத்து ஆய்(ஆநிரை மேய்ப்போர்) மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் அந்திரன், திதியன், நன்னன் ஆகியனவாகும்.
  • புகழ்பெற்ற வேளிர்கள் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி ஆகியோராவர்.
  • அரசுரிமை பரம்பரையானது. அரசர் ‘கோ’ என அழைக்கப்பட்டார். அது கோன் எனும் சொல்லின் சுருக்கமாகும்.
  • வேந்தன், கோன், மன்னன், கொற்றவன், இறைவன் எனும் வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார்.
  • பட்டத்து இளவரசர் கோமகன் எனவும் அவருக்கு இளையோர் இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர்.
  • வருமானம் வரிகள் மூலம் பெறப்பட்டன. நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரமாகும். அது இறை என அழைக்கப்பட்டது. இதைத்தவிர அரசு சுங்கவரி, கப்பம், தண்டம் ஆகியவற்றையும் வசூல் செய்தது.
  • அரசருடைய படை என்று அழைக்கப்பட்ட இராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்பனவாகும்.
  • படைத்தலைவர் தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார்.
  • போரில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆயுதங்கள் வாள், கேடயம், தோமாரம் (எறியீட்டி) ஈட்டி, வில், அம்பு ஆகியனவாகும்.
  • ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் படைக் கொட்டில் என அழைக்கப்பட்டது.
  • மண்ணின் வளத்தைப் பொறுத்து நிலங்கள் வகைப்படுத்தப்பட்டன . மருதநிலம் மென்புலம் (நன்செய்) என அழைக்கப்பட்டது. அதில் நெல்லும் கரும்பும் விளைந்தன.
  • நெய்தல் தவிர மற்றவை வன்புலம் (புன்செய்) என அழைக்கப்பட்டன. அவற்றில் தானியங்களும் பருப்பு வகைகளும் விளைந்தன.
  • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்- வேட்டையாடுதல் / சேகரித்தல்-குறவர், குறத்தியர் -முருகன்(கடவுள்)
  • முல்லை - காடும், காடு சார்ந்த இடமும் - ஆநிரை மேய்த்தல்- ஆயர், ஆய்ச்சியர் - மாயோன்
  • நெய்தல் - கடலும் கடல் சார்ந்த பகுதியும்-மீன்பிடித்தல் / உப்பு உற்பத்தி - பரதவர், நுளத்தியர் - வருணன்
  • பாலை - வறண்ட நிலம் - வீரச் செயல்கள் - மறவர், மறத்தியர் - கொற்றவை
  • மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் - வேளாண்மை - உழவன், உழத்தியர் - இந்திரன்
  • மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன். சங்க காலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு), இந்திரன், வருணன் மற்றும் கொற்றவை ஆகியோராவர்.
  • கரிகாலன் இசையின் ஏழு சுவரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்).
  • பாடல்கள் பாடும் புலவர்கள் பாணர், விறலியர் என அழைக்கப்பட்டனர்.
  • மக்களின் மிக முக்கியமான தொழில்கள் வேளாண்மை, ஆநிரை மேய்த்தல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகியவையாகும்.
  • வணிகம் உள்ளூர், உள்நாட்டில், கடல் கடந்து வெளிநாட்டில் என மூன்று நிலைகளில் நடைபெற்றது.
  • கடற்கரையோரமாகப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகப் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டன. முக்கியத் துறைமுகங்களில் கலங்கரை இலங்குசுடர் எனும் ஒளிவிளக்குக் கோபுரங்கள் இருந்தன.
  • புகார், மதுரை போன்ற முக்கியமான நகரங்களில் இரண்டு வகையான சந்தைகள் இருந்தன. மதுரையில் நாளங்காடி எனப்படும் காலைநேரச் சந்தையும் அல்லங்காடி எனப்படும் மாலைநேரச் சந்தையும் இருந்துள்ளன.
  • முக்கியத் துறைமுகங்கள் - முசிறி, தொண்டி, கொற்கை
  • முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் - உப்பு, மிளகு, முத்துக்கள், தந்தம், பட்டு, நறுமணப் பொருட்கள், வைரம், குங்குமப்பூ, விலைமதிப்பு மிக்க கற்கள், மஸ்லின், சந்தனக் கட்டை.
  • முக்கிய இறக்குமதிப் பொருட்கள் - புஷ்பராகம், தகரம், கண்ணாடி, குதிரைகள்.
  • இந்திய வணிகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ரோமப்பேரரசர் ஆரிலியன் இந்தியப் பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்.
  • தமிழகத்திற்கும் கிரேக்கம், ரோம், எகிப்து, சீனா, தென்கிழக்காசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குமிடையே வணிக உறவுகள் நிலவியதைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் மெய்ப்பித்துள்ளன.
  • ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) எனும் நூலில் முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார். ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது.
  • கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது) அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்.
  • களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்குக் குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன.
  • அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது.
  • சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.

இந்தியா - மௌரியருக்குப் பின்னர் (Updated On: June 8, 2024)

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ- கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
  • தொல்லியல் சான்றுகள் கல்வெட்டுகள் / செப்புப் பட்டயங்கள் --> தனதேவனின் அயோத்தி கல்வெட்டு, பெர்சிபோலிஸ் நக்ஸி ரஸ்தம் கல்வெட்டு, மோகா (தட்சசீலம் செப்புப்பட்டயம்), ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு, நாசிக் மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி), முதலாம் டேரியஸின் கல்வெட்டு
  • நாணய சான்றுகள் --> சாதவாகனரின் நாணயங்கள், இரண்டாம் கட்பிஸிசின் நாணயங்கள், ரோமானிய நாணயங்கள்.
  • இலக்கியச் சான்றுகள் --> புராணங்கள், கார்கி சம்கிதா, பாணபட்டரின் ஹர்ஷ சரிதம், பதஞ்சலியின் மகாபாஷ்யம், குணாதியாவின் பிரிகஸ்தகதா, நாகார்ஜுனாவின் மத்யமிக சூத்ரா, அஸ்வகோஷரின் புத்த சரிதம், காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்
  • அயல் நாட்டவர் குறிப்புகள்--> சீன பௌத்தத் துறவி யுவான்-சுவாங்கின் பயணக் குறிப்புகள்
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
  • புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.
  • கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.
  • புஷ்யமித்ரர் வேதசமயத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது ஆதிக்கத்தை நி லை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
  • பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
  • புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரர் அரச பதவி ஏற்றார்.
  • அக்னிமித்ரர், காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.
  • அந்நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.
  • தேவபூதி கடைசி சுங்க அரசராவார். அவர் தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார்.
  • வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.
  • புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர்.
  • சமஸ்கிருத மொழி நாளடைவில் வளர்ச்சியடைந்து அரசவை மொழியானது.
  • கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
  • சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.
  • கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
  • கன்வ அரசர்கள்--> வாசுதேவர், பூமிமித்ரர், நாராயணர், சுசர்மன்.
  • கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார்.
  • சிமுகா, சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.
  • குஷாணர்கள் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் கோலோச்சினர்.
  • சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
  • அவரைத் தொடர்ந்து அவருடைய சகோதரர் கிருஷ்ணா பதவியேற்றார். கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர்.
  • சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.
  • இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
  • கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள வசிஸ்டபுத்திர புலமாயி நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர். கி.மு .(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் கண்டரா மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது.
  • பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.
  • சாதவாகனர்கள் மிகச் சிறந்த கட்டடக்கலை வல்லுநர்கள் ஆவர். அவர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளைக் கட்டினர்.
  • பிற்காலத்தைச் சார்ந்த சாதவாகன அரசர்கள் இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களின் சின்னம் பொறிக்கப்பட்ட ஈய அல்லது செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.
  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
  • இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர்.
  • கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
  • இந்தியாவில் இந்தோ-கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
  • சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சைத்தியர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது. அவருடைய தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.
  • சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர் ருத்ரதாமன் ஆவார். அவருடைய ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
  • சாகர்கள் ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ் என்னும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்.
  • குஷாணர்கள் பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச்-சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினராவர்.
  • பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர்.
  • குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர் கனிஷ்கர் ஆவார். கி.பி. (பொ.ஆ) 78 ஆம் ஆண்டு அரச பதவி ஏற்றார்.
  • தொடக்கத்தில் காபூல், குஷாணர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் அது பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.
  • கனிஷ்கர் சீனத் தளபதி பன்-சியாங் என்பவரைத் தோற்கடித்து, இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.
  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார்.
  • பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் கனிஷ்கர் பௌத்தத்தைத் தழுவினார்.
  • பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.
  • இப்பேரவையில்தான் ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
  • கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார். அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.
  • அஸ்வகோஷர் புத்தசரிதம் என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.
  • குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும். குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் (Updated On: June 11, 2024)

  • குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் எனக் கருதப்படுகிறார். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது.
  • இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார்.
  • சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. லிச்சாவையா என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
  • லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.
  • முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார்.
  • சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
  • வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
  • தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
  • சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
  • சமுத்திரகுப்தர் தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார்.
  • குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
  • விக்கிரமாதித்யர் ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பெளத்த அறிஞர் இந்தியா வந்தார்.
  • மிகச் சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் (நவரத்தினங்கள்) இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது.
  • விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்:- காளிதாசர்- சமஸ்கிருதப் புலவர், ஹரிசேனர் - சமஸ்கிருதப் புலவர் அமர சிம்ஹர் - அகராதியியல் ஆசிரியர் தன்வந்திரி - மருத்துவர் காகபானகர் - சோதிடர் சன்கு - கட்டடக் கலை நிபுணர் வராகமிகிரர் - வானியல் அறிஞர் வராச்சி - இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர் விட்டல்பட்டர் - மாயவித்தைக்காரர் (Magician)
  • இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்: விக்கிரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரமதேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ
  • இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.
  • குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர், அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார்.
  • மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார்.
  • குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.
  • குப்தப் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப்பிரிக்கப்பட்டன. அவற்றை உபாரிகா எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர்.
  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.(அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்)
  • குப்தர்களின் இராணுவப் பதவிகளின் பெயர்கள் பாலாதிகிரிதா, (காலாட்படையின் தளபதி) மஹாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • குப்தர் காலத்தில் சேத்ரா என்பது வேளாண்மைக்கு உகந்த நிலமாகவும், கிலா என்பது தரிசு நிலங்களாகவும், அப்ரகதா என்பது வனம் அல்லது காட்டுப் பகுதியாகவும்,வஸ்தி என்பது குடியிருப்பதற்கு உகந்த நிலமாகவும், கபத சரகா என்பது மேய்ச்சல் நிலங்களாகவும் கருதப்பட்டது
  • குப்தர் கால வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’ மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின
  • குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன.
  • சந்திர குப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத்தூண் இன்றளவும் துருபிடிக்காமல் உள்ளது
  • சமுத்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர்.
  • குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம்.
  • குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலகமொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன.
  • குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணமும் வளர்ச்சி பெற்றது. அது பாணினி எழுதிய அஷ்டதியாயி, பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யம் எனும் நூல்களை அடிப்படையாகக் கொண்டது.
  • வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா எனும் பெளத்த அறிஞர் சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதினார்.
  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம் , ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
  • ஆரியபட்டர் வராகமிகிரர், பிரம்ம குப்தர் ஆகியோர் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல், வானியல் அறிஞர்கள் ஆவர்.
  • ஆரியபட்டர் தனது நூலான சூரிய சித்தாந்தாவில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார் . பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
  • மருத்துவத் துறையில் புகழ் பெற்ற அறிஞர் தன்வந்திரி ஆவார். அவர் ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
  • சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.
  • சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.
  • வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சம் தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தது.
  • புஷ்யபூதி குப்தர்களிடம் படைத்தளபதியாகப் பணி செய்தவர். குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றார்.
  • பிரபாகர வர்த்தனர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் புஷ்யபூதி அரச குடும்பம் செல்வாக்கும் வலிமையும் மிக்கதாக மாறியது.
  • பிரபாகர வர்த்தனர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய மகன் ராஜவர்த்தனர் அரியணை ஏறினார்.
  • ராஜவர்த்தனன் வங்காளத்தைச் சேர்ந்த கெளடா வம்ச அரசர் சசாங்கரால் வஞ்சமாகக் கொல்லப்பட்டார். இதன் விளைவாக அவருடைய தம்பியான ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் அரசரானார்.
  • ஹர்ஷர் தனது தலைநகரைத் தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
  • வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ஹர்ஷவர்த்தனர் ஆவார். ஹர்ஷர் 41 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் .
  • வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஹர்ஷர் ஒருங்கிணைத்தார்.
  • ஹர்ஷர் தனரது ஆட்சியை தென்னிந்தியாவில் பரப்புவதற்கு மேற்க்கொண்ட முயற்சிகளை , சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி தடுத்து நிறுத்தினார்.
  • ஹர்ஷர் சீனப்பயணி யுவான் சுவாங்கை முதன்முதலாக ராஜ்மகாலுக்கு (ஜார்கண்ட்) அருகேயுள்ள கஜன்கலா என்ற இடத்தில் சந்தித்தார்.
  • ஹர்ஷரின் காலத்தில் பாகா, ஹிரண்யா, பாலி ஆகிய மூன்று வரிகள் வசூல் செய்யப்பட்டன.
  • புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்றழைக்கப்படும் யுவான் சுவாங், ஹர்ஷரின் ஆட்சியின்போது இந்தியாவுக்கு வந்தார்.
  • சி-யூ-கி எனும் அவரது பயணக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பு, ஹர்ஷர் காலத்து இந்தியாவின் சமூக பொருளாதார, மத, பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவான செய்திகளை வழங்குகிறது.
  • ஹர்ஷரின் புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியனவாகும்.
  • பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகிய கவிஞர்கள் ஹர்ஷரின் அவையை அலங்கரித்தனர்.

தென்னிந்திய அரசுகள் (Updated On: June 12, 2024)

  • பல்லவ அரசர்கள் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண்பகுதிகளையும் ஆண்டனர்.
  • பல்லவர்கள் பற்றிய கல்வெட்டுகள் மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
  • செப்பேடுகள் :- காசக்குடிச் செப்பேடுகள்
  • இலக்கியங்கள்:- மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக் கலம்பகம்.
  • இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு) 550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்) எனப் பிரபலமாக அறியப்பட்டார். பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதன் வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்ற அவர் சிவ பக்தராக மாறினார். – பெரியபுராணம்
  • மகேந்திரவர்மன் (ஏறத்தாழ கி.பி. 600 - 630) பல்லவ ஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார். தொடக்ககாலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார்.
  • மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார்.
  • மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார்.
  • இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் ராஜசிம்மன் ஆவார்.
  • சிம்ம விஷ்ணு அவனிசிம்மர் என அழைக்கப்படுகிறார்.
  • முதலாம் மகேந்திரவர்மன் அவர்கள் சங்கீரணஜதி,மத்தவிலாசன்,குணபாரன், சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன் என்ற பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகிறார்
  • முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன், வாதாபி கொண்டான் என அழைக்கப்படுகிறார்
  • 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது.
  • 1.பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி 2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி 3. கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
  • மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டட பாணியை உணர்த்துகின்றன.
  • ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார். காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்
  • கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
  • பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.
  • காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
  • நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
  • தென்னிந்திய ஒவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
  • மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
  • சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார் . அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
  • நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிரதிவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும்.
  • இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
  • புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்.
  • சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும்பகுதியை ஆண்டனர். அவர்களின் தலைநகர் வாதாபி (பதாமி).
  • 1. வாதாபிச் சாளுக்கியர்கள், 2. வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்), 3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்).
  • அய்கோல் கல்வெட்டு அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது. இது சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.
  • ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர். அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவை,
  • இராட்டிரகூடர்களில் முதலாம் கிருஷ்ணர் தந்திதுர்க்கரை அடுத்துப் பதவி ஏற்றார். எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் இவர் கட்டியதாகும்.
  • ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் அமோகவர்ஷர், அவர் மான்யக்கேட்டாவில் (தற்போது கர்நாடகாவில் உள்ள மால்கெட்) புதிய தலைநகரை உருவாக்கினார்.
  • அமோகவர்ஷர் கி.பி. (பொ.ஆ) 814 - 878) ஜினசேனர் எனும் சமணத் துறவியால் சமணத்தை தழுவினார்.
  • மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
  • அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கவிராஜமார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
  • இக்காலகட்டத்தில் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா ஆகியோராவர்.
  • ஆதிகவி பம்பா அவரது நூற்களான ஆதிபுராணம், விக்கிரமார்ஜுன விஜயம் ஆகியவற்றிற்காகப் பெரும்புகழ் பெற்றவர்.
  • முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்திரிக்கின்றது.
  • விக்கிரமார்ஜுன விஜயம் மஹாபாரதத்தின் மீள் தருகையாகும். இதில் தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி பம்பா எழுதியுள்ளார்.
  • எல்லோராவின் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர்கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது.
  • எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் இயற்பெயர் ஸ்ரீபுரி.
  • இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர்.

ஆசியா மற்றும் ஐரோப்பா (Updated On: June 12, 2024)

  • ஆசியாவில் நாற்பத்து எட்டு நாடுகள் உள்ளன. ஆசியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் 1. கிழக்கு ஆசியா, 2. தென்கிழக்கு ஆசியா, 3. தெற்கு ஆசியா, 4. தென்மேற்கு ஆசியா, 5. மத்திய ஆசியா
  • ஆசியாவின் இயற்கை அமைப்பினை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, 1. வட தாழ்நிலங்கள் 2. மத்திய உயர் நிலங்கள் 3. தெற்கு பீடபூமிகள் 4. பெரும் சமவெளிகள் 5. தீவுக்கூட்டங்கள்
  • ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலம் சைபீரியச் சமவெளி ஆகும்.
  • ஆசியாவில் இரு மலை முடிச்சுக்கள் காணப்படுகின்றன. அவை, 1) பாமீர் முடிச்சு 2) ஆர்மீனியன் முடிச்சு
  • முடிச்சு என்பது மலைத் தொடர்கள் கூடும்/பிரியும் இடங்கள் ஆகும்.

புவி மாதிரி

No points available for this lesson.

பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

No points available for this lesson.

மக்களாட்சி

No points available for this lesson.

உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்புறமும்

No points available for this lesson.

சாலை பாதுகாப்பு

No points available for this lesson.

Add Comments


Comments

No comments yet for this lesson. Be the first to comment!

 

Welcome to our website dedicated to providing essential points and notes from TNPSC (Tamil Nadu Public Service Commission) books, organized by lesson for your convenience. Aspiring candidates preparing for TNPSC examinations often find themselves overwhelmed with the vast syllabus and numerous reference materials. In response to this challenge, our platform curates the most crucial insights and highlights from TNPSC books, meticulously sorted by lesson. Whether you're a beginner stepping into the world of competitive exams or a seasoned candidate aiming for success, our website aims to simplify your preparation journey. Dive into our comprehensive collection of important points and notes, tailored to help you grasp key concepts effectively and efficiently. Empower your TNPSC exam preparation with our curated resources and embark on your path to success with confidence.

Samacheer Kalvi 6th Standard Notes

Samacheer Kalvi 7th Standard Notes

Samacheer Kalvi 8th Standard Notes

Samacheer Kalvi 9th Standard Notes

Samacheer Kalvi 10th Standard Notes

Quiz Main Page

Tamil Choice Quiz Section

Tamil Match Quiz Section